‘லூசு மாறி சேரன் பேசுறாரு’:  மீண்டும் சேரனை வம்புக்கு இழுத்த சரவணன்! 

 

‘லூசு மாறி சேரன் பேசுறாரு’:  மீண்டும் சேரனை வம்புக்கு இழுத்த சரவணன்! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3யில் கடந்த ஒரு வாரமாகப் போடு ஆட்டம் போடு மற்றும் மொட்ட கடிதாசி டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதனால் வீட்டில் பல்வேறு குழப்பங்கள் எழுந்தது. தற்போது அந்த டாஸ்க் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. டாஸ்க் முடிந்த பிறகுச் சரியாக விளையாடாத இரண்டு நபரை ஹவுஸ் மேட்ஸ் ஒருமனதாகத் தேர்வு செய்து சிறைக்கு அனுப்புவார்கள். 

அதில் சேரன், சரவணன் பெயரை கூற இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருந்ததை முதல் புரோமோவில் பார்த்து இருந்தோம். தற்போது அது மீண்டும் தொடர்வது போல் இரண்டாவது புரோமோவில் காட்டப்பட்டுள்ளது. 

அதில் சரவணன், ‘சேரன் லூசு போல் பேசிக்கொண்டு இருக்காரு’ என்று சொல்ல உடனே ஹவுஸ் மேட்ஸ் நீங்கள் தவறாக பேசுகிறீர்கள் என்று அவரை கண்டித்தனர். இருப்பினும் விடாமல் சரவணன் ‘நீ என்னை நேரடியாக வம்புக்கு இழுக்குற’ என்று ஒருமையில் பேசுகிறார். இதைக் கண்ட ஹவுஸ் மேட்ஸ் வாய் அடைத்துப் பொய் அவர்களைப் பார்த்துக் கொண்டு இருப்பது போல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது. 

இதைக் கண்ட ரசிகர்களுக்கு சேரனுக்கு ஆதரவாகவும், சரவணனுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.