லுங்கியுடன் கள் குடித்த நடிகை அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

 

லுங்கியுடன் கள் குடித்த நடிகை அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

நடிகை அமலாபால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லுங்கியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கேரளா: நடிகை அமலாபால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லுங்கியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ் ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளவர் நடிகை அமலாபால். இயக்குநர் ஏ.எல். விஜய்யுடனான திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததையடுத்து சினிமா பக்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் நடிகர் விஷ்ணுவுடன் அவர் நடித்திருந்த ’ராட்சசன்’ படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. ’ராட்சசன்’ படத்தை அடுத்து மேயாத மான் பட இயக்குநர் இயக்கும் ‘ஆடை’ படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகை அமலாபால் லுங்கியுடன் காட்டுப்பகுதியில் இருக்கும்  புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில், ‘கள் குடித்து மீன் கறி உண்ணும் இடத்தில் நான் இருக்கிறேன்’ என்ற பாடல் வரிகளை பதிவிட்டுள்ளார். தற்போது  இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

சமீபத்தில் நடிகர் விஷ்ணுவை அமலா பால்  2-வதாக திருமணம் செய்ய உள்ளதாகவும் வதந்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.