லுங்கியில் சுற்றித்திரியும் அமலா பால் வைரலாகும் புகைப்படம்!

 

லுங்கியில் சுற்றித்திரியும் அமலா பால் வைரலாகும் புகைப்படம்!

நடிகை அமலா பால் லுங்கி அணிந்து இருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை: நடிகை அமலா பால் லுங்கி அணிந்து இருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினிகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை அமலாபால். இயக்குநர் ஏ.எல். விஜய்யுடனான திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததையடுத்து சினிமா பக்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ’ராட்சசன்’ படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.அதைத்தொடர்ந்து ‘ஆடை’ அதோ அந்த பறவை போன்ற திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். 

இந்நிலையில், சமீபத்தில் லுங்கி அணிந்து இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “லுங்கி எனக்கு பிடிக்கும்.பொய் சொல்ல முடியாது” என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.