லுக் அவுட் நோட்டீஸ் என்ன ஆனது? – தயாநிதி மாறன் கேள்விக்கு மத்திய அரசு மழுப்பல் பதில்

 

லுக் அவுட் நோட்டீஸ் என்ன ஆனது? – தயாநிதி மாறன் கேள்விக்கு மத்திய அரசு மழுப்பல் பதில்

பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ்களின் நிலவரம் பற்றி தி.மு.க எம்.பி தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.2014ம் ஆண்டுக்குப் பிறகு லுக்அவுட் நோட்டீஸ்கள் நீர்த்துப்போக செய்யப்பட்டுள்ளத

பொருளாதார குற்றங்களை செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக்அவுட் நோட்டீஸ் நீர்த்துப்போய்விட்டதா என்று தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு மழுப்பலான பதிலை அளித்துள்ளது.
பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ்களின் நிலவரம் பற்றி தி.மு.க எம்.பி தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.2014ம் ஆண்டுக்குப் பிறகு லுக்அவுட் நோட்டீஸ்கள் நீர்த்துப்போக செய்யப்பட்டுள்ளத,அப்படி என்றால அதன் விவரம் என்ன,எத்தனை பேர் மீதான லுக் அவுட் நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டன.எத்தனை பேருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.அவற்றின் நிலை என்ன என்று கேட்டிருந்தார்.அதற்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. 

Nityanand Roy

இது தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்துள்ள பதிலில், “பல்வேறு குற்றங்களுக்காக குடியேற்றத் துறையால் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது.நோட்டீஸ் அனுப்பப் பரிந்துரைக்கும் விசாரணை அமைப்பு கேட்டுக்கொள்ளும்பட்சத்தில் குடியேற்றத் துறையால் அந்த லுக் அவுட் நோட்டீஸ் திரும்பப் பெறப்படும்.ரத்து செய்யப்படும் அல்லது திருத்தம் செய்யப்படும்.பொருளாதார குற்றங்கள் தொடர்பான லுக் அவுட் நோட்டீஸ் தகவல்கள் மட்டும் தனியாக பராமரிக்கப்படுவது இல்லை. வெளிநாட்டுக்குத் தப்பிய பொருளாதார குற்றவாளிகளை நாடு கடத்த,தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டம் இயற்றப்பட்டுள்ளது” என்றார்.