லீனாவுக்கு ஆதரவளிக்கக் கூடாது: சித்தார்த்தின் தந்தையை மிரட்டிய சுசி கணேசன்

 

லீனாவுக்கு ஆதரவளிக்கக் கூடாது: சித்தார்த்தின் தந்தையை மிரட்டிய சுசி கணேசன்

மீ டூ விவகாரத்தில் பெண் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு ஆதரவளிக்கக் கூடாது என்று இயக்குநர் சுசி கணேசன் தனது தந்தைக்கு மிரட்டல் விடுத்ததாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

சென்னை: மீ டூ விவகாரத்தில் பெண் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு ஆதரவளிக்கக் கூடாது என்று இயக்குநர் சுசி கணேசன் தனது தந்தைக்கு மிரட்டல் விடுத்ததாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய மீ டூ பிரசாரத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த மீ டூ விவகாரத்தில் ஏராளமான பிரபலங்கள் பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பெண் இயக்குநரும், கவிஞருமான லீனா மணிமேகலை, இயக்குநர் சுசி கணேசன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்திருந்தார். லீனாவின் புகாரை மறுத்ததுடன் அவர் மீது இயக்குநர் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதற்கு லீனா, கோர்ட் மூலம் நோட்டீஸ் வரட்டும் சுசி கணேசன் போன்ற பொய்யர்களோடு அல்லாமல் நேரடியாக அதிகாரத்துடன் மோதுவது எனக்கு பிடிக்கும் என்று பதில் ட்வீட் போட்டுள்ளார்.

இதனிடையே, லீனா மணிமேகலைக்கு ஆதரவாக பேசி வந்த நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், வயதான என் தந்தைக்கு நேரடியாக போன் செய்து, நான் லீனா மணிமேகலைக்கு ஆதரவளித்தால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியிருக்கிறார். நான் லீனாவுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறேன். தைரியமாக போராடுங்கள் சகோதரி என்று ட்வீட்டியுள்ளார்.