லீக் ஆனது ரியல்மீ 6 ஸ்மார்ட்போன்.. இத்தனை சிறப்பம்சங்கள்.. இவ்வளவு மலிவு விலையிலா?

லீக் ஆனது ரியல்மீ 6 ஸ்மார்ட்போன்.. இத்தனை சிறப்பம்சங்கள்.. இவ்வளவு மலிவு விலையிலா?

ரியல்மீ 6 ஸ்மார்ட்போன் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி அனைவரின் எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ளது. சில சிறப்பம்சங்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இந்திய தொழில்நுட்ப சந்தையில் ரியல்மீ நிறுவனம் ஒவ்வொரு காலாண்டிலும் தனது பயனாளர்களை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்களிடமும் ரியல்மீ ஸ்மார்ட் போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக ரியல்மீ 4 மற்றும் ரியல்மீ 5 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் லாபகரமான விற்பனையை பெற்றதுடன் அதன் சிறப்பம்சங்களும் பயனாளர்களிடம் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. 

realme

இந்நிலையில் சீனாவில் ரியல்மீ 6 ஸ்மார்ட் போன்கள் புகைப்படம் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஏற்கனவே வெளிவந்த ரியல்மீ 5 ஸ்மார்ட் போனில் 4 கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. தற்போது ரியல்மீ 6 ஸ்மார்ட்போனில் 5 கேமராக்கள் உடன் வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. 

அதேபோல் கேமிங் செய்பவர்கள் பயன்படுத்துவதற்கு என பிரத்தியேகமாக ரியல்மீ 6 ஸ்மார்ட் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது என வெளிவந்த தகவல்களில் தெரிகிறது. ஆனால், என்ன வகையான பிராசஸர் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் தற்போது வரை தெரியவில்லை. 

realme 6

இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ. 10000 முதல் இந்த ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தற்போது இணையதளத்தில் லீக் ஆகி இருக்கும் ரியல்மீ 6 ஸ்மார்ட் போன் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்டுள்ளது என தெளிவாக தெரிகிறது.

நவம்பர் 20 ஆம் தேதி ரியல்மீ X2 ப்ரோ ஸ்மார்ட்போனையும், டிசம்பரில் ரியல்மீ XT ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய ரியல்மீ நிறுவனம் திட்டமிட்டுருக்கிறது. இதற்கிடையில் ரியல்மீ 6 ஸ்மார்ட் போன்களின் புகைப்படங்கள் லீக் ஆகி பெரும் வைரலாகி இருப்பதால் வெளியாகும் தேதியில் மாற்றம் இருக்கலாம் என தெரிகிறது.