லீக்கானது தளபதி 63 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ! 

 

லீக்கானது தளபதி 63 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ! 

நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

சென்னை: நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

தெறி, மெர்சல் வெற்றி திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 63. ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு சென்னையில் பல இடங்களில் பிஸியாக நடைபெற்று வருகிறது. தற்போது விஜய், நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. விஜய், நயன்தாரா ஆகியோர் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போது எடுக்கப்படும் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தளபதி 63 படத்தின் ஷூட்டிங் தற்போது காசிமேடு கடற்கரை பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு நள்ளிரவில் நடந்தபோதிலும் அங்கு விஜய் மற்றும் நயன்தாராவை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அப்போது விஜய் நடிக்கும் காட்சி படப்பிடிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியாகியுள்ளனர்.