லிப்ஸ்டிக் போடு, இல்லைனா கவினோடு ஓடு! லாஸ்லியாவை பங்கமாக கலாய்த்த இலங்கைத் தமிழர்

 

லிப்ஸ்டிக் போடு, இல்லைனா கவினோடு ஓடு! லாஸ்லியாவை பங்கமாக கலாய்த்த இலங்கைத் தமிழர்

லாஸ்லியாவை இலங்கை தமிழர் ஒருவர் பயங்கரமாகக் கலாய்த்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

சென்னை: லாஸ்லியாவை இலங்கை தமிழர் ஒருவர் பயங்கரமாகக் கலாய்த்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதல் மற்றவர்கள் பிரச்சினையில் மூக்கை நுழைக்காமல் இருக்கும் ஒரே நபர் லாஸ்லியா. ஓவியாவை போல் இவர் செய்யும் சில குறும்புத் தனத்தால் இவருக்கு என்று பல ஆர்மி உருவாகினர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல தன் இவரின் உண்மையான முகம் வெளிவந்துள்ளது. 

அதாவது கவின், சாக்ஷி இடையே இருக்கும் காதலை பிரித்து மற்றவர்களிடம் திமிராக நடந்து கொள்வது என்று தொடர்ச்சியாக அவ பெயரைச் சம்பாதித்து வருகிறார். இவரின் செயல் இலங்கை தமிழ் மக்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் இவரை கண்டித்து இலங்கைத் தமிழர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘பல் தேய்க்காமல் ஆடு, போர் அடிச்சா லிப்ஸ்டிக் போட்டு கொண்டு பாடு இல்லனா பாத்ரூம்க்கு கவினோடு ஓடு’ என லாஸ்லியவை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.