லிப்ஸ்டிக்கில் துப்பாக்கி! பெண்களின் பாதுகாப்புக்காக பிரத்யேக படைப்பு!! 

 

லிப்ஸ்டிக்கில் துப்பாக்கி! பெண்களின் பாதுகாப்புக்காக பிரத்யேக படைப்பு!! 

பெண்களின் பாதுகாப்புக்காக மலிவான விலையில் லிப்ஸ்டிக் துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த ஷ்யாம் லிப்ஸ்டிக் துப்பாக்கியை கண்டுபிடித்துள்ளார். இதன் விலை வெறும் 600 ரூபாய் தான். லிப்ஸ்டிக் போன்று அமைப்புடைய இதில் ஒரு பொத்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அழுத்தினால் உடனே அதிலுள்ள குண்டு வெடிப்பது போன்ற சத்தத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாம் அவசர உதவி எண் 112க்கு உதவி கோரி மெசேஜ் அனுப்பும். பெண்கள் மொபைல் போன்கள் போன்று கைப்பைகளிலேயே இந்த லிப்ஸ்டிக் துப்பாக்கியை வைத்துக்கொள்ளலாம்.  லிப்ஸ்டிக் துப்பாக்கியை சார்ஜ் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது. 

லிப்ஸ்டிக்

இந்த லிப்ஸ்டிக் துப்பாக்கிக்கு காப்புரிமை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், அறிவியல் விஞ்ஞானி ஆகுவதே தன்னுடைய ஆசை என்றும் ஷ்யாம் தெரிவித்துள்ளார்.