‘லிட்டில் இண்டியா’ மகாராஜா.. மகாராணி.. சேனாபதி சாப்பாடு!

 

‘லிட்டில் இண்டியா’ மகாராஜா.. மகாராணி.. சேனாபதி சாப்பாடு!

சென்னை வடபழநியில் இருக்கும் குமரன் காலணியில் இருக்கிறது இந்த லிட்டில் இண்டியா உணவகம்.தரைத்தளம். சிறிய இடம்தான்.ஆனால் உள் அலங்காரம் சிறப்பாக இருக்கிறது. இங்கே தரப்படும் மதிய உணவு சிறப்பாக இருப்பதாக பேச்சுக் கிளம்பி இருக்கிறது.மதிய உணவிற்கு சாப்பாடும்,இரண்டுவகையான பிரியாணிகளும் வைத்திருக்கிறார்கள்.மதிய சாப்பாட்டையும் மூன்று வகையாக பிரித்து இருக்கிறார்கள்.

சென்னை வடபழநியில் இருக்கும் குமரன் காலணியில் இருக்கிறது இந்த லிட்டில் இண்டியா உணவகம்.தரைத்தளம். சிறிய இடம்தான்.ஆனால் உள் அலங்காரம் சிறப்பாக இருக்கிறது. இங்கே தரப்படும் மதிய உணவு சிறப்பாக இருப்பதாக பேச்சுக் கிளம்பி இருக்கிறது.

மதிய உணவிற்கு சாப்பாடும்,இரண்டுவகையான பிரியாணிகளும் வைத்திருக்கிறார்கள்.மதிய சாப்பாட்டையும் மூன்று வகையாக பிரித்து இருக்கிறார்கள்.மகாராஜா மீல் 400 ரூபாய்.இத்துடன் நான்கு வகையான தொக்குகள் தருகிறார்கள். அவர்கள் வைத்திருக்கு 7 வகைத் தொக்குகளில் ஏதேனும் நான்கை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

லிட்டில் இந்தியா

அடுத்தது மகாராணி மீல்.இத்துடன் மூன்று வகையான தொக்குகள் தரப்படும், இதன் விலை 300 ரூபாய்.அடுத்தது சேனாதிபதி மீல் ,இத்துடன் ஒரு தொக்கு தருகிறார்கள். இங்கே ஃபிரை ஐட்டங்கள் எதுவும் இல்லை.அனைத்துமே கெட்டியான தொக்கு வடிவில்தான் தரப்படுகின்றன. அப்படியே சோற்றில் போட்டு பிசைந்து உருட்டி உள்ளே வீச வேண்டியதுதான். மட்டன்,சிக்கன்,க ணவாய், கருவாடு,காடை,இறால்,மீன் என அவர்கள் தரும் ஏழுவிதமான தொக்குகளில் மட்டன் தொக்கும் கருவாடும் சிறப்பாக இருக்கின்றன.

இவையில்லாமல்,ஒரு வெஜிடேரியன் கூட்டு,ஒரு பொரியல்,அப்பளம்,ரசம்,தயிர் தருகிறார்கள். சுவீட்டாக இவர்கள் தரும் பிரட் அல்வாவும் மிகவும் சுவையாக இருக்கிறது. இரண்டாவது முறை கேட்டாலும் தருகிறார்கள், என்பது நல்ல விசயம். ஹைதராபாத் பிரியாணி அதிக காரமில்லாமல் இருக்கிறது. ஆனால்,அதில் இருக்கும் மட்டன் துண்டுகள் நன்றாக வெந்து பிரியாணிக்கு சுவையூட்டுகின்றன.

little india food

இந்த ஹைதராபாத் பிரியாணியின் விலை 190 ரூபாய்.இவற்றோடு சீரகசம்பா பிரியாணியும் உண்டு.இந்த சீரகசம்பா பிரியாணிபற்றி தனித்துச் சொல்ல வேண்டும்.நல்ல மனத்துடன் அளவான மசாலாவுடன் சிறப்பாக இருக்கிறது. உங்களுக்கு பிரியாணி பிடிக்கும் என்றால் கண்ணை மூடிக்கொண்டு இதை ஆர்டர் செய்யலாம்.எல்லாமே சிறப்பாக இருக்கின்றன. ஆனால்,சாப்பாட்டோடு தரப்படும் தொக்குகள் கொஞ்சம் ‘ சுரீர்’ காரத்துடன் இருக்கின்றன. ஆனால் இங்கே மற்ற ஹோட்டல்கள் போல குழம்புகள் ஊற்றப்படுவதில்லை என்பதால்,நீங்கள் அந்தத் தொக்குகளை அப்படியே சோற்றில் போட்டு பிசைந்து சாப்பிட வேண்டும் என்பதால் அந்த சுரீர் காரம் தேவைப்படத்தான் செய்கிறது. இங்கே முழுக்காடையை கடாய் தொக்காக செய்து தருகிறார்கள். மிகவும் சிறப்பாக இருக்கிறது. தவறவிட்டு விடாதீர்கள்.