லிங்காயத் மடாதிபதி சிவக்குமாரசாமி காலமானார்

 

லிங்காயத் மடாதிபதி சிவக்குமாரசாமி காலமானார்

சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சிவகுமார சாமி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 111.

பெங்களூரு: சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சிவகுமார சாமி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 111.

பெங்களூருவில் இருந்து சுமார் 70 கிமீ தூரத்தில் உள்ள துமக்கூருவில் லிங்காயத்துகளின் மடமான சித்த கங்கா மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின்மடாதிபதி சிவகுமார சாமி. கடந்த 1907-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி பிறந்த இவர், தனது மடத்தின் மூலம் பல கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார். அது தவிர சமஸ்கிருதம் மற்றும் வேதம் சொல்லித் தரும் பாடசாலையையும் நடத்தி வருகிறார்.

“நடமாடும் கடவுள்”  எனவும் மகான் பசவப்பாவின் மறு அவதாரம் எனவும் பக்தர்களால் போற்றப்படும் சிவகுமார சாமிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில் மத்திய அரசு பத்மபூஷன் விருது அளித்து கௌரவப்படுத்தியது. இவரது 111-வது பிறந்தநாள் விழா கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த விழாவில், சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சிவக்குமாரசாமி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 111. மடாதிபதி சிவக்குமாரசாமி இறுதிச்சடங்கு நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.