லிங்காயத் மடாதிபதி ஆகும் இஸ்லாமிய இளைஞர்!

 

லிங்காயத் மடாதிபதி ஆகும் இஸ்லாமிய இளைஞர்!

தக் நகரைச் சேர்ந்த ரஹிமான் முல்லா என்பவர் இந்த மடாதிபதியிடம் மிகுந்த அன்பு கொண்டவர்.அடிக்கடி இந்த மடத்துக்கு வந்து வழிபாடு செய்பவர்.மேலும் 2 ஏக்கர் நிலம் உட்பட பல நன்கொடைகளை மடத்துக்கு வழங்கி உள்ளார்.இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தனது மகன் திவான் செரீஃப் முல்லாவை இந்த மடத்தில் தங்கவைத்து பசவண்ணரின் போதனைகளை படிக்க வைத்துள்ளார். 

12-ம் நுற்றாண்டில் வாழ்ந்த சீர்திருத்தவாதி பசவண்ணர்.இவரது கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் லிங்காயத் மடம் ஒன்று கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் அசுதி கிராமத்தில் இருக்கிறது.இதன் தலைமை மடாதிபதி முருகராஜேந்திர கோரனேஷ்வர சுவாமி பசவண்ணர் கருத்துக்களை பரப்பி வருபவர்.

கதக் நகரைச் சேர்ந்த ரஹிமான் முல்லா என்பவர் இந்த மடாதிபதியிடம் மிகுந்த அன்பு கொண்டவர்.அடிக்கடி இந்த மடத்துக்கு வந்து வழிபாடு செய்பவர்.மேலும் 2 ஏக்கர் நிலம் உட்பட பல நன்கொடைகளை மடத்துக்கு வழங்கி உள்ளார்.இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தனது மகன் திவான் செரீஃப் முல்லாவை இந்த மடத்தில் தங்கவைத்து பசவண்ணரின் போதனைகளை படிக்க வைத்துள்ளார். 

liga-madam.jpg1.jpg

திவான் செரீஃப் முல்லாவும் பசவண்ணர் மற்றும் அவர் வழிவந்தோரின் தத்துவங்கள், வசனங்கள் ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தார். இதைத் தொடர்ந்து சென்ற சென்ற 2019 நவம்பர் 10-ம் தேதி தலைமை மடாதிபதி முருகராஜேந்திர கோரனேஷ்வர சுவாமி திவான் திவான் செரீஃப் முல்லாவுக்கு தீட்சை அளித்தார். அதைத்தொடர்ந்து அவரும் மடத்திலேயே தங்கி பசவண்ணரின் வசனங்களை பரப்பி வந்தார்.

இந்த நிலையில் அசுதி லிங்காயத் மடத்தின் அடுத்த மடாதிபதியாக 33 வயதாகும் இஸ்லாமியரான திவான் செரீஃப் முல்லா நேற்று அறிவிக்கப்பட்டார்.இதற்கு பெரும்பாலான லிங்காயத் மடங்கள் ஆதரவு தெரிவித்து பாராட்டியுள்ளன. வழக்கம்போல இந்துத்துவ அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

liga-madam.jpg1.jpg

இதுகுறித்து மடாதிபதி முருகராஜேந்திர கோரனேஷ்வர சுவாமிகள் கூறும்போது, பசவண்ணரின் கொள்கைப்படி எங்களுக்கு சாதி,மதம்,இனம்,மொழி பேதமில்லை. அனைவரும் சமம்.எங்கள் மடத்தின் கதவுகள் எல்லா மதத்தினருக்கும் திறந்தே இருக்கும் என்று அறிவித்து இருக்கிறார்.அப்ப, சித்தராமையா சொன்னது போல நிஜமாகவே லிங்காய்த்துகள் இந்துக்கள் இல்லையோ!.