‘லாஸ்லியா… நானு’: வைரலாகும் முகின் தங்கை வீடியோ!

 

‘லாஸ்லியா… நானு’: வைரலாகும் முகின் தங்கை வீடியோ!

முகின்  தங்கை ரியாக்ஷனை பார்க்கும் போதே அவருக்கு லாஸ்லியாவை தன்னுடன் ஒப்பிட்டுப் பேசியது பிடிக்கவில்லை என்றே தோன்றுகிறது. 

முகின் லாஸ்லியாவை தன்னுடன் ஒப்பிட்டு பேசியது அவரது தங்கைக்கு பிடிக்கவில்லை என்பது நேற்றைய நிகழ்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று  ஃப்ரீஸ் டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் முகின் தாய் மற்றும் தங்கை பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். குறிப்பாக அவரது  தாய், நீ பின்வாங்கக் கூடாது, எதுவும் எளிதில் கிடைக்காது என்று கூறு அவரை உற்சாகப் படுத்தினார். முகின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தது மொத்த ஹவுஸ்மேட்ஸ்  மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

 

முகின் அம்மா மற்றும் தங்கையுடன் தனியாக அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது முகின்  தனது தங்கையிடம், லாஸ்லியாவை பார்க்கும் போது உன்னை பார்ப்பது போல தான் இருக்கிறது. அவளது சேட்டையும் இதே மாதிரி இருக்கும் என்று கூறினார். அதற்கு அவரது தங்கை ஜனனி, நக்கல் தொனியுடன் ‘லாஸ்லியா, நானு’ என்று கூறினார். முகின்  தங்கை ரியாக்ஷனை பார்க்கும் போதே அவருக்கு லாஸ்லியாவை தன்னுடன் ஒப்பிட்டுப் பேசியது பிடிக்கவில்லை என்றே தோன்றுகிறது. 

losliya

ஆரம்பத்திலிருந்தே லாஸ்லியாவிடம் நீ தங்கை போல இருக்கிறாய் எண்டு கூறி முகின் அன்பாக பழகி வந்தார். சில நாட்களாக லாஸ்லியாவின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றமுமே முகினின்  தங்கையின் முகசுழிப்பிற்கு காரணம்  என்று சொல்லப்படுகிறது.