லாஸ்லியாவை சந்திக்க இலங்கை செல்லும் வனிதா!?

 

லாஸ்லியாவை சந்திக்க இலங்கை செல்லும் வனிதா!?

சண்டைக்குப் பெயர் போனவர் என்ற பெயர் எடுத்ததோடு, தனது தாய்மை உணர்வையும் வெளிப்படுத்தினார்.

நடிகை வனிதா விஜயகுமார் இலங்கை செல்லவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

vanitha

நடிகர் விஜய்-யுடன் சந்திர லேகா படத்தில் அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இதையடுத்து சில படங்களில் தோன்றிய அவர், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், சண்டைக்குப் பெயர் போனவர் என்ற பெயர் எடுத்ததோடு, தனது தாய்மை உணர்வையும் வெளிப்படுத்தினார்.

losliya

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்ட வனிதா, வெளியில் வந்ததும் லாஸ்லியா கவினுக்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்தார். கவின் 5 லட்சம் பணத்துடன் வெளியில் வந்ததைப் பாராட்டிய வனிதா, லாஸ்லியா என் தங்கை மாதிரி;  என் ஓட்டு லாஸ்லியாவுக்கு தான் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

 

இந்நிலையில் வனிதா  இலங்கை செல்லவிருப்பதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  இதை கண்ட நெட்டிசன்கள் வனிதா லாஸ்லியாவை காண வருகிறார் என்று பதிவிட்டு வருகின்றனர். சிலரோ அவர் படப்பிடிப்பிற்காக இலங்கை வரவுள்ளதாகக் கூறி வருகின்றனர்.