லாஸ்லியாவுடன் காதல்: கவினின் ஷாக் கொடுக்கும் பதில்!

 

லாஸ்லியாவுடன் காதல்: கவினின் ஷாக் கொடுக்கும் பதில்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் கவின் -லாஸ்லியா காதல் குறித்து கவின் வெளிப்படையாகக் கூறியுள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் கவின் -லாஸ்லியா காதல் குறித்து கவின் வெளிப்படையாகக் கூறியுள்ளார். 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் தொடங்கி 105 நாட்களுடன்  சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் முகின் ராவ் டைட்டில்  வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். இந்த சீசனில் பெரிதும் பேசும் பொருளானது கவின் – லாஸ்லியா காதல் தான். நிகழ்ச்சி முடிவடைந்திருக்கும் நிலையில் சக போட்டியாளர்கள் சந்தித்துக் கொண்ட நிலையில் கவின் – லாஸ்லியா இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் ஒன்று கூட வெளியாகவில்லை.

kavin

இதையடுத்து  பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது. இதில் போட்டியாளர்கள் கலந்து கொண்டு நடனம் ஆடியுள்ளனர். இந்த  நிகழ்ச்சியில் கவின் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து வந்துள்ளார். லாஸ்லியா மார்டன் புடவையில் வந்து கலக்கியுள்ளார். 

losliya

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவினிடம் லாஸ்லியாவின் காதல் பற்றி என்ன முடிவெடுத்து இருக்கீங்க? என்று கேள்வி கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. அதற்குப் பதிலளித்துள்ள கவின், எனக்கு  சில கடமைகள் உள்ளது. அதனால் மற்ற விஷயங்களை பற்றி எல்லாம் நினைக்க நேரமில்லை என்று  கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் லாஸ்லியா -கவின் ரசிகர்கள்  அதிர்ச்சியில் உள்ளனர். உண்மையில் எதனால் கவின் அவ்வாறு கூறினார் என்பது பிக் பாஸ்  கொண்டாட்ட  நிகழ்ச்சியை முழுவதுமாக பார்த்தால் மட்டுமே தெரியவரும்.