லாஸ்லியாவுக்கு குவியும் திரைப்பட வாய்ப்புகள்! காணாமல் போன ஓவியா,ஜூலி  கால்ஷீட்!

 

லாஸ்லியாவுக்கு குவியும் திரைப்பட வாய்ப்புகள்! காணாமல் போன ஓவியா,ஜூலி  கால்ஷீட்!

சினிமாவில் எண்ட்ரியாவதற்கு குறுக்கு வழி முன்பெல்லாம் கவிதைப் புத்தகங்கள்,இலக்கியங்களின் அறிமுகம் என்பதை தகுதியாக கொண்டிருந்தது. பின்பு குறுப்படங்கள், யூ-ட்யூப் வீடியோ, டிக்-டாக் என்று மாறியது. இப்போது, எப்படியாவது விஜய் டிவியில் தலைக்காட்டினால் போதும் என்கிற லெவலில் இருக்கிறது. அதுவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்களுக்கு கண்டிப்பாக அதன் பிறகு சினிமா வாய்ப்பு கொஞ்சம் பிரகாசமாகிவிடுகிறது.

losliya

சினிமாவில் எண்ட்ரியாவதற்கு குறுக்கு வழி முன்பெல்லாம் கவிதைப் புத்தகங்கள்,இலக்கியங்களின் அறிமுகம் என்பதை தகுதியாக கொண்டிருந்தது. பின்பு குறுப்படங்கள், யூ-ட்யூப் வீடியோ, டிக்-டாக் என்று மாறியது. இப்போது, எப்படியாவது விஜய் டிவியில் தலைக்காட்டினால் போதும் என்கிற லெவலில் இருக்கிறது. அதுவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்களுக்கு கண்டிப்பாக அதன் பிறகு சினிமா வாய்ப்பு கொஞ்சம் பிரகாசமாகிவிடுகிறது. அப்படிக் கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி மேலேறி வருவதும் நடிகை ஓவியா, ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி மாதிரி வருகிற வாய்ப்புகளையும் பிக்பாஸ் வீடு மாதிரி டீல் செய்து கோட்டை விடுவதும் அவரவர் தலையெழுத்தில் கிறுக்கப்பட்டிருப்பது. 

oviya and julie

இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீஸனில் பங்கு பெற்றுள்ள லாஸ்லியாவிற்கும் விரைவில் சீரியல் வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா தற்போது பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.  ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்களின் பல்வேறு ஆதரவுகள் இருந்து வந்தன. ராஜா ராணி சீரியலை எடுத்து வந்த இயக்குனர் பிரவீன், தான் எடுக்க போகும் ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் லாஸ்லியா கண்டிப்பாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் ராஜா ராணி இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

losliya

கடந்த சில வாரத்திற்கு முன்னர் சேரனுக்கு, இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் லாஸ்லியாவிடம் பேசிய போது உங்களுக்காக திரையுலகம் வாய்ப்பு தர காத்துக்கொண்டிருக்கிறது. இவ்வளவு தான் நான் இப்போதைக்கு கூறுவேன். இப்போது வேண்டுமானால் நீங்கள் லாஸ்லியா வாக இருக்கலாம் ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும் போது கெயின்லியாவாக (gainலியா)வெளியே வருவீர்கள் என்றும் கூறியிருந்தார்.