லாஸ்லியாவின் உண்மையான முகம் இது தான்! வீடியோ வெளியிட்டு முகத்திரையைக் கிழித்த வனிதா 

 

லாஸ்லியாவின் உண்மையான முகம் இது தான்! வீடியோ வெளியிட்டு முகத்திரையைக் கிழித்த வனிதா 

பிக் பாஸ் லாஸ்லியா பற்றி வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சென்னை: பிக் பாஸ் லாஸ்லியா பற்றி வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி முதல் இரண்டு வாரங்கள் மட்டுமே விறுவிறுப்பாகச் சென்றது. அதன்பிறகு வனிதா வெளியேற, பிக பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமே இல்லாமல் சென்று கொண்டு இருந்தது. பின்னர் கன்டென்ட் இல்லாமல் தவித்த வந்த பிக் பாஸ் முக்கோண காதல் கதையையே ஒளிபரப்பி தனது TRBயை சற்று ஏற்றிக்கொண்டது. 

இந்த நிலையில் இதிலிருந்து வெளியேறிய பிறகு வனிதா, என்ன தான் மற்ற வேளைகளில் பிஸியாக இருந்தாலும் அடிக்கடி பிக் பாஸ் சீசன் 3 குறித்து எதாவது ஒரு பதிவு வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது லொஸ்லியா, அபிராமிக்கு அறிவுரை கூறும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் லாஸ்லியா, அபியிடம், ‘உன்னையும், முகனையும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. அதனால் யார் என்ன சொன்னாலும், நீ மாற்றிக்கொள்ளாதே’ என்று அவரை தூண்டி விடுவது போல் பேசியுள்ளார்.  

இந்த வீடியோ பதிவிட்ட வனிதா, ‘அட கடவுளே … அபிராமிக்கு அறிவுரை கூறும் லாஸ்லியாவின் பாவனையை பாருங்கள்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அந்த விடியோவை கண்ட நெட்டிசன்கள் லாஸ்லியாவிற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.