லாலு பிரசாத் யாதவுக்கு கடுமையான சிறுநீரக பாதிப்பு….

 

லாலு பிரசாத் யாதவுக்கு கடுமையான சிறுநீரக பாதிப்பு….

காரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கடுமையான சீறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக ராஞ்சி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

லாலு பிரசாத் யாதவ்

இந்நிலையில் லாலு பிரசாத் யாதவ் கடுமையாக சீறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் பி.கே.ஜா தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், லாலுவின் உடம்பில் சிறு கட்டி இருந்தது. நாளடைவில் அது பெரிதாகியதால் அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றினோம். அப்போது அவரது ரத்தத்தில் தொற்று ஏற்பட்டு இருந்ததை கண்டு பிடித்தோம்.

மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவ்

லாலுவின் சீறுநீரகம் தற்போது 37 சதவீதம் மட்டுமே செயல்படுகிறது. 63 சதவீதம் பழுதாகி விட்டது. கடந்த ஒரு வாரமாக அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது என தெரிவித்தார். லாலுவின் உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினரும், கட்சி தொண்டர்களும் சோகத்தில் உள்ளனர்.