லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து..சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 8 தொழிலாளர்கள் பரிதாப பலி!

 

லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து..சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 8 தொழிலாளர்கள் பரிதாப பலி!

உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மகாராஷ்டிராவில் இருந்து லாரியில் சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்றுள்ளனர்.

கொரோனா பாதிப்பின் காரணமாக கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து வந்து பணி புரிபவர்கள் அந்தந்த மாநிலங்களில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் சிக்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் உணவுக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். இதில் சிலர் நடந்தே அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. மற்ற சிலர், லாரிகளில் சொந்த ஊருக்கு செல்ல முயற்சி செய்து வருகின்றனர்.

ttn

இந்நிலையில், உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மகாராஷ்டிராவில் இருந்து லாரியில் சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்றுள்ளனர். அவர்கள் நேற்று இரவு மத்திய பிரதேச மாநிலம் குணாவில் உள்ள கேன்ட் பி.எஸ் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் லாரியில் இருந்த 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, காயமடைந்தவர்களையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.