லாரிகள் வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அபாயம்!

லாரிகள் வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அபாயம்!

புதிய மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் லாரிகளுக்கு விதிக்கப்படும் அபாரதத் தொகையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் லாரிகள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

புதிய மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் லாரிகளுக்கு விதிக்கப்படும் அபாரதத் தொகையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் லாரிகள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Lorry strike

புதிய மோட்டர் வாகன சட்டத்தின் படி போக்குவரத்து விதிமீறல்கள் போது விதிக்கப்படும் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதனை எதிரித்து அனைத்திந்திய மோட்டர் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்ததையடுத்து தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் செயல் படும் நான்கரை லட்சம் லாரிகளும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 38 ஆயிரத்து 390 லாரிகளும், அதுமட்டுமின்றி இந்திய முழுவதும் 45 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிக்கப் பட்டுள்ளது. 

Lorry strike

இது குறித்து பேசிய சேலம் மாவட்டம், லாரி உரிமையாளர்  சங்க தலைவர் சென்னகேசவன், புதிய மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட அபாரதத் தொகையை நிறுத்த வேண்டும் என்றும், டீசல் மற்றும் பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி க்குள் கொண்டு வர வேண்டும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 10% அதிகரிக்கப் படும் சுங்கவரியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.