லாரன்ஸ் கனவில் மண்ணை போட்ட தமிழ் ராக்கர்ஸ் 

 

லாரன்ஸ் கனவில் மண்ணை போட்ட தமிழ் ராக்கர்ஸ் 

நடிகர் ராகவ லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள காஞ்சனா 3 திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் ராகவ லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள காஞ்சனா 3 திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் காமெடி கலந்த பேய் படமாக வெளியாகி தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கிய திரைப்படம் ‘காஞ்சனா சீரிஸ்’. ‘முனி’, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகியுள்ளது. 

lawrence

அதில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, பிரியதர்ஷினி, என்று பலர் நடித்திருந்தனர். நேற்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் திருநங்கைகளைக் கௌரவிக்கும் விதமாக திருநங்கைகளுக்காகச்  சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

lawrence

இந்நிலையில் புதிய படங்கள் திரைக்கு வந்தால் உடனே அது திருட்டுத்தனமாகத் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையத்தில் வெளி வருவது வழகமான ஒன்று ஆகிவிட்டது. இதுவரை, நடிகர் சங்கம் மட்டுமல்ல, தயாரிப்பாளர் சங்கம் உள்பட வேறு எந்த சங்கத்தாலும் திருட்டுத்தனமாகப் படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்க முடியவே இல்லை. 

kanchana

இந்த நிலையில் காஞ்சனா 3 திரைப்படம் வெளியாகி சில மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகிப் படக்குழுவை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட்டால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எகிறும் என்று கணக்கிட்டு வெளியிட்டார் லாரன்ஸ். ஆனால் அந்த கனவில் தமிழ் ராக்கர்ஸ் மண்ணை போட்டுவிட்டது.                                                                                                                                                                                                      இதையும் படிங்க: ஒரு பொண்ண பாத்ததுமே அவள தூக்கிட்டு போய் ரேப் பண்ற தைரியம் எங்களுக்கு இருக்கு: நடிகர் விஷால் ஆவேசம்!