லாப கனவை கலைத்த கொரோனா வைரஸ்….. ரூ.1,388 கோடி நஷ்ட கணக்கு காட்டிய ஆக்சிஸ் வங்கி…

 

லாப கனவை கலைத்த கொரோனா வைரஸ்….. ரூ.1,388 கோடி நஷ்ட கணக்கு காட்டிய ஆக்சிஸ் வங்கி…

ஆக்சிஸ் வங்கி கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் யாரும் எதிர்பாராத வகையில் ரூ.1,388 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.

நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி கடந்த நிதியாண்டின் 4வது காலாண்டுக்கான (ஜனவரி-மார்ச்) தனது நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கி கடந்த மார்ச் காலாண்டில் யாரும் எதிர்பாராத வகையில் ரூ.1,388 கோடி இழப்பை சந்தித்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் (2019 ஜனவரி-மார்ச்) ஆக்சிஸ் வங்கி ரூ.1,505 கோடி லாபம் ஈட்டியிருந்தது.

கொரோனா வைரஸ்

ஆக்சிஸ் வங்கி கடந்த மார்ச் காலாண்டில் முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் நல்ல சம்பாதித்து இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்து இருந்தனர். ஆனால் அந்த வங்கி நஷ்டக் கணக்கை காட்டியிருப்பது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸால் ஏற்படும் சரிவு காரணமாக ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கியதே ஆக்சிஸ் வங்கி இழப்பை சந்திதற்கு காரணம். 

ஆக்சிஸ் வங்கி

கடந்த மார்ச் காலண்டு இறுதி நிலவரப்படி, ஆக்சிஸ் வங்கியின் மொத்த வாராக் கடன் 4.86 சதவீதமாக குறைந்துள்ளது. 2019 டிசம்பர் காலாண்டு இறுதியில் ஆக்சிஸ் வங்கியின் மொத்த வாராக் கடன் 5 சதவீதமாக உயர்ந்து இருந்தது. கடந்த மார்ச் காலாண்டில் ஆக்சிஸ் வங்கி ரூ.7,730 கோடி ஒதுக்கீடு செய்தது. இதில் கொரோனா வைரஸால் ஏற்படும் சரிவுக்காக ஒதுக்கீடு செய்த தொகையும் அடங்கும்.