லாபம் ரூ.2,463 கோடி! பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்ட் ரூ.1….விப்ரோ அறிவிப்பு…..

 

லாபம் ரூ.2,463 கோடி! பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்ட் ரூ.1….விப்ரோ அறிவிப்பு…..

விப்ரோ நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.2,463 கோடி லாபம் ஈட்டியுள்ளது. பங்கு ஒன்றுக்கு ரூ.1 இடைக்கால டிவிடெண்டாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டின் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான விப்ரோ ஐ.டி. உள்பட பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது. விப்ரோ நிறுவனம் தனது டிசம்பர் காலாண்டு (2019 அக்டோபர்-டிசம்பர்) நிதிநிலை முடிவுகளை நேற்று வெளியிட்டது. விப்ரோ நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,462.90 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 3.20 சதவீதம் குறைவாகும்.

விப்ரோ

கடந்த டிசம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருவாய் 2 சதவீதம் அதிகரித்து ரூ.15,470.50 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் ஐ.டி. சேவைகள் வாயிலான வருவாய் மட்டும் 2.97 சதவீதம் அதிகரித்து ரூ.15,100.60 கோடியாக உயர்ந்துள்ளது.விப்ரோ நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.1 இடைக்கால டிவிடெண்டாக அறிவித்துள்ளது. 

அபிதலி நீம்முச்வாலா

விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான அபிதலி நீம்முச்வாலா இது குறித்து கூறுகையில், அனைத்து வர்த்தக பிரிவுகளிலும் சார்பற்ற வளர்ச்சி, புவியியல் மற்றும் நடைமுறைகளுடன் ஒரு நல்ல காலாண்டு முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளோம். வாடிக்கையாளர் உறவுகளை மிகவும் நெருக்கமாக்குவது, எங்களது வழிமுறையை மாற்றுவது மற்றும் பெரிய ஒப்பந்தங்களை வெல்வதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவோம் என தெரிவித்தார்.