லாபம்ன்னா இப்படி கிடைக்கணும்…….. கொண்டாட்டத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி……

 

லாபம்ன்னா இப்படி கிடைக்கணும்…….. கொண்டாட்டத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி……

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடந்த டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.4,670 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாகும்.

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தனது இந்த நிதியாண்டின் 3வது காலாண்டுக்கான (2019 அக்டோபர்-டிசம்பர்) நிதிநிலை முடிவுகளை நேற்று வெளியிட்டது. கடந்த டிசம்பர் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.4,670 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 2 மடங்குக்கு மேல் அதிகமாகும்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி நிகர வட்டி வருவாய் 24 சதவீதம் அதிகரித்து ரூ.8,545  கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலாண்டில் அந்த வங்கியின் இதர வருவாய் சுமார் 19 சதவீதம் அதிகரித்து ரூ.4,043 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த காலாண்டு இறுதி நிலவரப்படி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மொத்த வாராக்கடன் விகிதம் 5.95 சதவீதமாக குறைந்துள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கிளை

நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி இந்த நிதியாண்டில் கூடுதலாக 400 கிளைகளை திறந்துள்ளது. இதனையடுத்து அந்த வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 5,275ஆக உயர்ந்துள்ளது.