லாபத்தில் மட்டுமல்ல, கடனிலும் ரிலையன்ஸ்தான் நம்பர் 1

லாபத்தில் மட்டுமல்ல, கடனிலும் ரிலையன்ஸ்தான் நம்பர் 1

இந்தியாவின் பெரிய நிறுவனம் என்ற பெயரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், டிசிஎஸ் நிறுவனமும் கடந்த பல மாதங்களாக மாறிமாறி பெற்றுவந்தன. இந்நிலையில், செபி அமைப்பிற்கு ஒவ்வொரு நிறுவனமும் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கையில், ரிலையன்ஸ் நிறுவனம் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

reliance

நிறுவனத்தின் மொத்த வருவாயில் முதலிடம் பிடித்திருந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தை (ஆறு லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய்) பின்னுக்கு தள்ளி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் (ஆறு லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய்) முதலிடம் பிடித்துள்ளது. நிகர லாபத்திலும் இந்தியன் ஆயில் நிறுவனத்தை (17,274 கோடி ரூபாய்) தாண்டி, ரிலையன்ஸுக்குத்தான் முதலிடம் (39,558 கோடி ரூபாய்).

வருவாய், நிகர லாபம், சந்தையில் புழங்கும் மொத்த பங்குகளின் மதிப்பு என மூன்று காரணிகளிலும் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் முதலிடத்தை பெற்றுள்ளது. அதேநேரம், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கடன் 92,700 கோடி ரூபாய் என்ற அளவுக்குள் இருக்கும்போது, ரிலையன்ஸின் கடன் அதனைவிட மூன்று மடங்கிற்கும் அதிகமாக, இரண்டு லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.