லாபத்தில் கொழிக்கும் தனியார் வங்கிகள்…..ரூ.7,416 கோடி லாபம் பார்த்த எச்.டி.எப்.சி. வங்கி…..

 

லாபத்தில் கொழிக்கும் தனியார் வங்கிகள்…..ரூ.7,416 கோடி லாபம் பார்த்த எச்.டி.எப்.சி. வங்கி…..

எச்.டி.எப்.சி. வங்கி கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.7,416 கோடி ஈட்டியுள்ளது.

வங்கி துறையில் பொதுத்துறை வங்கிகளை காட்டிலும் தனியார் வங்கிகள் சிறப்பாக செயல்படுவதாக ஒரு கருத்து உண்டு. அது உண்மைதான் என்பது போல் எச்.டி.எப்.சி. வங்கியின் நிதிநிலை முடிவுகள் நிருபித்து உள்ளன. நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எப்.சி. வங்கி நேற்று தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது.

எச்.டி.எப்.சி. வங்கி

எச்.டி.எப்.சி. வங்கி கடந்த 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகரலாபமாக ரூ.7,416 கோடி ஈட்டியுள்ளது. இது 2018 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 33 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.5,586 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

எச்.டி.எப்.சி. வங்கி

வங்கி துறையில் கடன் வளர்ச்சி குறைவாக உள்ளநிலையில், கடந்த டிசம்பர் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கியின் வழங்கும் கடன் 19.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில் அந்த வங்கியின் திரட்டி டெபாசிட் 25.2 சதவீதம் அதிகரித்துள்ளது. எச்.டி.எப்.சி. வங்கியின் மொத்த வாராக்கடன் 1.42 சதவீதமாக உயர்ந்தது.