லாட்டரி அதிபர் மார்டின் நிறுவன காசாளர் அடித்துக் கொலை… குற்றவாளி யார்..?

 

லாட்டரி அதிபர் மார்டின் நிறுவன காசாளர் அடித்துக் கொலை… குற்றவாளி யார்..?

மார்ட்டின் கடந்த 2 நாள்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார்.

பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 24.57 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்கம் மற்றும் வைர நகைகள், கணக்கில் காட்டப்படாத, 1,214 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும், அதிகாரிகள் கைப்பற்றினர். மார்ட்டின் குழுமத்தில் கடந்த 25 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த பழனிசாமியிடமும் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  பழனியை விசாரணைகள் முடிந்து வருமான வரித்துறையினர் விடுவித்தனர். இந்த நிலையில்  காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனி பிணமாக கண்டெடுக்கப்பட்டார்

.palanisamy

பழனிசாமியின் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது மகன் ரோஹின்குமார் அளித்த புகாரின்பேரில், காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அவரது உடல் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், பழனிசாமியின் மனைவி சாந்தாமணி, தனது கணவரின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவரது மனைவி, உடலைப் பெற்றுக் கொள்ள மறுத்துள்ளார்.
வருமானவரித்துறை அதிகாரிகள் எனது கணவனை  தகாத வார்த்தைகளில் திட்டியும், அடித்தும் மன உளைச்சல் ஏற்படுத்தினர். அதனால் தான் அவர் உயிரிழந்தார். அவரது மரணம் இயற்கையானது அல்ல” என குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார்.leema rose

அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. பழனிசாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வருமான வரித்துறை சோதனை செய்த அடுத்த நாளே அவர் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் ச்ந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.  மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் , பழனிசாமி கொலையை விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.martin
 
தற்போது மார்ட்டின் கடந்த 2 நாள்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார். ஆக, பழனிசாமி கொல்லப்பட்டதற்கான காரணமும், யாரால் கொலை செய்யப்பட்டார் என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. உண்மை வெளிப்படும்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் பழனிசாமி மரண விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.