லாட்டரிக்கு ஒரே விதமான ஜி.எஸ்.டி. வரி…. மார்ச் 1ம் தேதி முதல் 28 சதவீதம் வரி விதிக்க மத்திய அரசு ஒப்புதல்…

 

லாட்டரிக்கு ஒரே விதமான ஜி.எஸ்.டி. வரி…. மார்ச் 1ம் தேதி முதல் 28 சதவீதம் வரி விதிக்க மத்திய அரசு ஒப்புதல்…

மார்ச் 1ம் தேதி முதல் லாட்டரிகளுக்கு ஒரே விதமாக 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் லாட்டரி வடிவத்தில் சூதாட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது. லாட்டரிகளுக்கு தற்போது இரண்டு விதமாக ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. அரசு நடத்தும் லாட்டரிகளுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. அதேசமயம் அரசு அங்கீகாரம் பெற்ற லாட்டரிகளுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

லாட்டரி (கோப்பு படம்)

இந்நிலையில் சமீபகாலமாக லாட்டரிகளுக்கு ஒரே மாதிரியான வரி விகிதம் விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதனை தொடர்ந்து ஜி.எஸ்.டி. விகிதத்தை பரிந்துரைக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த டிசம்பரில், லாட்டரிகள் சப்ளைக்கு ஒரே விதமாக 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் வாக்களித்தது.

லாட்டரி (கோப்பு படம்)

தற்போது மார்ச் 1ம் தேதி முதல் லாட்டரிகளுக்கு ஒரே வரி விதிப்பாக 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக வருவாய் துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, லாட்டரி விற்பனை நடைபெறும் மாநிலங்களில் வரும் 1ம் தேதி முதல் ஒரே விதமாக 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும்.