லாட்ஜில் ரகசிய சந்திப்பு… கடுகடுக்கும் எடப்பாடி… சிடுசிடுக்கும் ஓ.பி.எஸ்..!

 

லாட்ஜில் ரகசிய சந்திப்பு… கடுகடுக்கும் எடப்பாடி… சிடுசிடுக்கும் ஓ.பி.எஸ்..!

நான் முதல்வராக இருந்தவன். எனக்கு பொறுப்பு பதவி எல்லாம் கொடுத்து அசிங்கப்படுத்த வேண்டாம். இப்போ எப்டி இருக்கிறேனோ, அப்படியே இருந்துட்டு போறேன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அமெரிக்கா செல்கிறார். நம்பிக்கைக்கு உரிய முக்கிய அமைச்சர் ஒருவரிடம் பொறுப்பை கொடுத்துள்ளாராம். சில அதிகாரிகளை கண்காணிக்க சொல்லியும் உள்ளாராம். இவர் மூலம் லண்டனில் இருந்தே தகவல்களை தெரிந்து ரிமோட்டில் உத்தரவு வெளியாகும் ஏற்பாடு நடந்திருக்கிறதாம்.
velumani

கட்சி ஏற்கனவே பலவீனமடைந்துள்ளது. இந்த நிலையில் சொந்தக்கட்சிக்காரரை நம்பி முதல்வர் பொறுப்பை ஒப்படைக்காமால் இருப்பது பொதுமக்களின் மத்தியில் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று தொண்டர்கள் பேசிக் கொண்டது எடப்பாடியாரின் காதுக்கு போய் சேர்ந்துள்ளது. ’’என்னை தவிர வேறு யாரும் இந்த சீட்டை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. ops

பொறுப்பு எல்லாம் தர முடியாது. இனியும் ஓட்டல், லாட்ஜில் ரகசியமாக சந்தித்து இதுபோன்று பேசுவதை நிறுத்தி கொள்ள சொல்லுங்கள்’’ என்று முக்கிய நிர்வாகியிடம் கடிந்துகொண்டாராம். லண்டன் போவதற்குள் சமரசம் முடிந்து முக்கியமான ஓ.பி.எஸுக்கு  முதல்வர் பொறுப்பு வழங்கினாலும் வழங்கப்படலாம் என்று ஒரு பேச்சு ஓடுகிறது.

EPS

எடப்பாடி பொறுப்பை கொடுக்க தயாராக இருந்தாலும் இப்போது ஓ.பி.எஸ் ஏற்க தயாராக இல்லை. ’’நான் முதல்வராக இருந்தவன். எனக்கு பொறுப்பு பதவி எல்லாம் கொடுத்து அசிங்கப்படுத்த வேண்டாம். இப்போ எப்டி இருக்கிறேனோ, அப்படியே இருந்துட்டு போறேன். என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்’’ என்று ஒதுங்கி கொண்டதாகவும் சொல்கிறார்கள். இது குறித்த இறுதி தகவல் இன்று வெளியானாலும் சொல்வதற்கு இல்லை.