லாக்டவுன் விதிமீறல்….. காலையில் வாக்கிங் வருபவர்களை ஆரத்தி எடுக்கும் போலீசார்….

 

லாக்டவுன் விதிமீறல்….. காலையில் வாக்கிங் வருபவர்களை ஆரத்தி எடுக்கும் போலீசார்….

லாக்டவுன் விதிகளை மீறி காலையில் வாக்கிங் வருபவர்களை மகாராஷ்டிரா போலீசார் ஆரத்தி எடுத்து அவர்களுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை லாக்டவுனை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், வெளியே வரும் போது மாஸ்க் கண்டிப்பாக அணிய வேண்டும் என மக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

ஆரத்தி எடுக்கும் பெண் போலீஸ்

வீட்டுக்குள் முடங்கி கிடக்காமல் பலர் வெளியே வருகின்றனர். இது கொரோனா வைரஸ் மேலும் பரவுவதற்கு வழி செய்து விடுகிறது. வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே வரும் மக்களை போலீசார் தங்களது பாணியில் கவனித்து வருகின்றனர். அபராதம், வண்டி பறிமுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் அதிகாலையில் வாக்கிங் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வரும் மக்களை போலீசார் தனித்துவமான முறையில் கையாளுகின்றனர்.

ஆரத்தி எடுக்கும் பெண் போலீஸ்

தானேவில் நேற்று முன்தினம் காலையில் வாக்கிங் வருபவர்களை நிறுத்தி போலீசார் ஆரத்தி எடுத்தனர். மேலும் வீட்டை வெளியே வருவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் போலீஸ் அதிகாரி அவர்களிடம் அறிவுறுத்தினார். தானே பெண் போலீஸ் ஒருவர் காலையில் வாக்கிங் வந்தவர்களை நிறுத்தி ஆரத்தி எடுக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. போலீசாரின் இந்த வித்தியாசமான முயற்சியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.