லாக்டவுன் விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு டெல்லி போலீசின் நூதன தண்டனை… கொரோனா வைரஸால் இறந்தவரின் உடலை சுமந்தனர்….

 

லாக்டவுன் விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு டெல்லி போலீசின் நூதன தண்டனை… கொரோனா வைரஸால் இறந்தவரின் உடலை சுமந்தனர்….

டெல்லியில் லாக்டவுன் விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு, கொரோனா வைரஸால் இறந்தவரின் போலி உடலை சுமக்கும் வித்தியாசமான தண்டனையை போலீசார் வழங்கினர்.

எந்தவொரு அத்தியாவசிய தேவையும் இல்லாத போதிலும், வீட்டை விட்டு வெளியே வந்து லாக்டவுன் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். அதேசமயம் பல புதுமையான முறைகளை கையாண்டு விதி மீறல்களில் ஈடுபட்டவர்களை வெட்கப்பட வைக்கின்றனர். உதாரணமாக மகாராஷ்டிராவில் அண்மையில் லாக்டவுன் விதிமுறைகளை மீறி வாக்கிங் செல்வதற்காக வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி ஆரத்தி எடுத்தனர். இது போன்ற நடவடிக்கைகள் போலீசாருக்கு கை கொடுத்தது.

வாகன பரிசோதனையில் போலீசார்

தற்போது லாக்டவுன் விதி மீறலில் ஈடுபட்டவர்களுக்கு டெல்லி போலீசார் வித்தியாசமான முறையில் பாடம் கற்பித்தனர். கடந்த வாரம் மண்டவாலி காவல் நிலைய போலீசார் லாக்டவுன் விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்களை நிற்க சொல்லியுள்ளனர். ஆனால் அவர்கள் தப்பிக்க  முயற்சி செய்தனர். இருப்பினும் போலீசார் அவர்களை பிடித்தனர். அதன் பிறகு அவர்களை தனிநபர் பாதுகாப்பு உபகரண கருவிக்குள் வைக்கப்பட்டு இருந்த கொரோனா வைரஸால் இறந்தவரின் போலி உடலை போலீசார் சுமந்து செல்ல சொல்லி உள்ளனர்.

விதிமீறல்களில் ஈடுபவர்களை பிடிக்க முயற்சிக்கும் போலீசார்

ஆனால் அவர்கள் அலறியடித்து தப்பியோட முயன்றனர். ஆனால் முடியாததால் கடைசியில் உடலை தூக்கி சுமந்தனர். இது குறித்து டெல்லி போலீசார் கூறுகையில், விதி மீறல்களில் ஈடுபட்டவர்கள் உண்மையில் தூக்கி சுமந்தது கொரோனா வைரஸால் இறந்தவர் உடலை அல்ல. போலீசின் திட்டப்பபடி, தனிநபர் பாதுகாப்பு உபகரண கருவிக்குள் டம்மி உடல் வைக்கப்பட்டு ஸ்ட்ரெச்சரில் வைக்கப்பட்டு இருந்தது. அதைதான் அவர்கள் தூக்கினர். தேவையில்லாமல் வெளியே வருபவர்களுக்கு செய்தி வழங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.