லாக்டவுன் தளர்த்தப்பட்ட சில நாட்களிலேயே 10 ஆயிரம் டூ வீலர்களை விற்று தள்ளிய ஹீரோமோட்டோகார்ப்…

 

லாக்டவுன் தளர்த்தப்பட்ட  சில நாட்களிலேயே 10 ஆயிரம் டூ வீலர்களை விற்று தள்ளிய ஹீரோமோட்டோகார்ப்…

லாக்டவுன் தளர்த்தப்பட்ட சில நாட்களிலேயே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டூ வீலர்களை விற்பனை செய்துள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 25 முதல் இம்மாதம் 17ம் தேதி வரை மொத்தம் 54 நாட்கள் நாடு தழுவிய லாக்டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளது. லாக்டவுனின் முதல் 40 நாட்களில் வாகன தொழிற்சாலைகள் மற்றும் வாகன ஷோரூம், சர்வீஸ் சென்டர் உள்பட வாகன சம்பந்தமான நிறுவனங்களை திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் உள்நாட்டில் கடந்த மாதம் ஒரு வாகனம் கூட விற்பனையாகவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் உள்பட வாகன துறையை சேர்ந்த அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஹீரோ மோட்டோகார்ப் தயாரிப்பு ஆலை

இந்நிலையில் கடந்த வாரம் முதல் லாக்டவுன் கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது. வாகன தொழிற்சாலைகள், ஷோரூம்கள், சர்வீஸ் சென்டர்களை திறந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதனையடுத்து, வாகன துறை நிறுவனங்கள் மீண்டும் தங்களது வர்த்தகத்தை தொடங்கின. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது ஆலைகளை படிப்படியாக திறந்து வருகின்றன. வாகன நிறுவனங்கள் தங்களது விற்பனை தொடங்கி விட்டன.

ஹீரோ மோட்டோகார்ப் ஷோரூம்

நாட்டின் முன்னணி டூ வீலர் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ஹீரோமோட்டோகார்ப் லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட சில நாட்களிலேயே 10 ஆயிரம் டூ வீலர்களை விற்பனை செய்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் அண்மையில் கூறுகையில், கடந்த 7ம் தேதியன்று வாகனங்கள அனுப்ப தொடங்கியது முதல் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து விட்டோம். எங்களது மொத்த உள்நாட்டு விற்பனையில் 30 சதவீத பங்களிப்பை கொண்ட அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்புகள் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் உள்பட மொத்தம் 1,500 வாடிக்கையாளர் டச் பாயிண்டகளில் சில்லரை வர்த்தகத்தை தொடங்கி விட்டோம் என தெரிவித்துள்ளது.