லாக்டவுனை மே 29ம் தேதி வரை நீட்டித்த தெலங்கானா அரசு……துணிந்து முடிவெடுத்த முதல்வர் சந்திரசேகர் ராவ்…

 

லாக்டவுனை மே 29ம் தேதி வரை நீட்டித்த தெலங்கானா அரசு……துணிந்து முடிவெடுத்த முதல்வர் சந்திரசேகர் ராவ்…

தெலங்கானாவில் கொரோனா வைரஸ் பரவல் நிலவரம் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், லாக்டவுனை மேலும் 12 நாட்கள் அதிகரித்து மே 29ம் தேதி நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.

தெலங்கானாவில் இதுவரை கொரோனா வைரஸால் மொத்தம் 1,096 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 439 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 628 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் அமைச்சரவை  கூட்டம் நடந்தது. சுமார் 7 மணி  நேரம் நடந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியதாவது: 

தெலங்கானா மாநில வரைபடம்

மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, லாக்டவுன் மே 29ம் தேதி வரை மேலும் 12 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் லாக்டவுன் நீடிப்பை விரும்புகிறார்கள். எங்களது முடிவை பிரதமருக்கு தெரிவித்து விட்டேன். நாட்டின் புதிய மாநிலத்தில் 6 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலும், 18 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்திலும் மாவட்டத்திலும், பச்சை மண்டலத்தில்  9 மாவட்டங்களும் உள்ளன. 3 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. ஜி.எச்.எம்.சி., ரங்கா ரெட்டி மற்றும் மேட்சல் மாவட்டங்களின் நிலவரம் மோசமாக இருக்கிறது. சிவப்பு மண்டலத்திலும் கடைகளை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், நாம் ஹைதராபாத், மேட்சல், சூர்யாபட் மற்றும் விகராபாத்தில் எந்தவொரு கடைகளையும் திறக்கவில்லை.

கொரோனா வைரஸ்

தற்போது உள்ளக அறிக்கையை தொடர்ந்து மாநிலத்தில் குறிப்பாக ஹைதராபாத்தை சுற்றியுள்ள ரங்கா  ரெட்டி, மேட்சல் மற்றும் விகராபாத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டது.  அரசாங்கம் தனது முடிவை எடுத்தது. மாநிலத்தில் பதிவாகி உள்ள மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகளில் இந்த மாநிலங்களின் பங்கு மட்டும் 66 சதவீதமாகும். மேலும் கடந்த 10 நாட்களில் இந்த நான்கு மாநிலங்களில்தான் அதிகளவில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. உலகில் எந்தநாடும் எங்களுக்கு உணவளிக்க முடியாது. உணவு பாதுகாப்பில் தன்னிறைவை இழக்க எங்களால் முடியாது. உரங்கள் விதைக் கடைகள் மற்றும் விவசாய சாதனங்களை விற்கும் நிறுவனங்கள் தொடர்ந்து திறக்கப்படும். கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனை அலகுகளும் திறந்திருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.