லாக்டவுனால் 94 லட்சம் முன்பதிவு டிக்கெட் கேன்சல்….. ரூ.1,490 கோடியை பயணிகளுக்கு திருப்பி கொடுக்கும் இந்திய ரயில்வே

 

லாக்டவுனால் 94 லட்சம் முன்பதிவு டிக்கெட் கேன்சல்….. ரூ.1,490 கோடியை பயணிகளுக்கு திருப்பி கொடுக்கும் இந்திய ரயில்வே

லாக்டவுன் காரணமாக ரயில்கள் இயக்கப்படாததால், பயணிகள் முன்பதிவு செய்த 94 லட்சம் டிக்கெட்டுகள் கேன்சல் செய்யப்பட்டதால், ரூ.1,490 கோடியை அவர்களுக்கு ரீபண்டாக இந்தியன் ரயில்வே வழங்க உள்ளது.

தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு முதல் கட்டமாக கடந்த மாதம் 25ம் தேதி முதல் இம்மாதம் 14ம் தேதி வரை நாடு தழுவிய அளவில் லாக்டவுனை அமல்படுத்தியது. அனைத்து விதமான போக்குவரத்துகளும் முடக்கப்பட்டன. அதேசமயம் லாக்டவுன் அமல்படுத்துவதற்கு 3 தினங்களுக்கு முன்னதாகவே பெரும்பாலான ரயில் சேவைகளை இந்தியன் ரயில்வே நிறுத்தியது.

பணம்

இதனையடுத்து கடந்த மார்ச் 22ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ரயிலில் பயணம் செய்வதற்காக பயணிகள் முன்பதிவு செய்து இருந்த 59 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது. அந்த வகையில் பயணிகளுக்கு ரீபண்டாக ரூ.830 கோடியை இந்தியன் ரயில்வே வழங்க உள்ளது. தற்போது லாக்டவுனை மத்திய அரசு மேலும் 19 நீட்டித்துள்ளது.

ரயில்

இதனால் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை பயணிகள் முன்பதிவு செய்து இருந்த சுமார் 39 லட்சம் டிக்கெட்டுகள் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் பயணிகளுக்கு ரீபண்டாக ரூ.660 கோடி ரயில்வே வழங்க உள்ளது. ஆக லாக்டவுனால் ஒட்டு மொத்த அளவில் 94 லட்சம் முன்பதிவு டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டுள்ளதால் ரயில்வே ரீபண்டாக மொத்தம் ரூ.1,490 கோடியை பயணிகளுக்கு வழங்க உள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.