லாக்டவுனால் 40 ஆண்டுகளில் முதல் முறையாக மந்தநிலைக்கு செல்லும் இந்தியா…. ஆக்சிஸ் கேப்பிட்டல் கணிப்பு

 

லாக்டவுனால் 40 ஆண்டுகளில் முதல் முறையாக மந்தநிலைக்கு செல்லும் இந்தியா…. ஆக்சிஸ் கேப்பிட்டல் கணிப்பு

லாக்டவுனால் இந்தியா 40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த நிதியாண்டில் மந்தநிலைக்கு செல்லும் என ஆக்சிஸ் கேப்பிட்டல் கணித்துள்ளது.

ஆக்சிஸ் வங்கியின் துணை நிறுவனமான ஆக்சிஸ் கேப்பிட்டல் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள லாக்டவுனால், இந்தியா 40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த நிதியாண்டில் மந்திநிலைக்குள் செல்லும். தயாரிப்பு, வர்த்தக போக்குவரத்து மற்றும் தொடர்பு சுருங்கியதால் இந்த நிதியாண்டில் இந்தியாவின மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1.7 சதவீதம் குறையும் என தெரிவித்துள்ளது.

ஆக்சிஸ் கேப்பிட்டல்

ஆக்சிஸ் கேப்பிட்டலுடன் பொருளாதார நிபுணர் பிரித்விராஜ் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், ஆண்டு முழுவதும் எதிர்மறையான சுவடுகளை நாம் காணாத ஒரே துறைகள் விவசாயம், பொது நிர்வாகம் மற்றும் சிறிய அளவிலான நிதி மற்றும் வணிக சேவைகள் என தெரிவித்தார்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு தனது அறிக்கையில், இந்த நிதியாண்டில் (2020-21) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 0.9 சதவீதம் முதல் 1.5 சதவீதம் என்ற அளவில் இருக்கும். கொரோனா வைரஸால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள லாக்டவுனால் ஏற்படும் பொருளாதாரம் கொந்தளிப்பான கட்டத்திற்கு உட்பட்டுள்ளது  என தெரிவித்துள்ளது.