லாக்டவுனால் மக்களின் மன பதற்றம் அதிகரிப்பு… வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி கொடுத்தா நல்லது.. கேரள சர்ச் கோரிக்கை

 

லாக்டவுனால் மக்களின் மன பதற்றம் அதிகரிப்பு… வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி கொடுத்தா நல்லது.. கேரள சர்ச் கோரிக்கை

அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்க அனுமதிக்கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு சிரோ மலபார் கத்தோலிக் சர்ச் கடிதம் எழுதியுள்ளது.

தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதுமாக இன்று வரை மொத்தம் 54 நாட்கள் லாக்டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளது. லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்படும் என பிரதமர் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார். லாக்டவுனின் முதல் 40 நாட்கள் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர். லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாலதான் கடந்த 2 வாரங்களாக மக்கள் வெளியே வர தொடங்கியுள்ளனர். 

கேரள முதல்வர் பினராயி விஜயன்

லாக்டவுன் காலத்தில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களை அனுமதிக்க கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவு இன்று வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கேரளாவில் சிரோ மலபார் சர்ச் பேராயர் ஜார்ஜ் அலெஞ்சேரி, அனைத்து மத வழிப்பாட்டு தலங்களையும் திறக்க அனுமதிக்கோரி அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: சமூக விலகல் மற்றும் அரசு விதிக்கும் இதர விதிமுறைகளுக்கு உட்பட்டு வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்க வேண்டும். இது அனைத்து மதங்களுக்கும் பொருந்தும்.

சர்ச்

லாக்டவுன் தொடர்ந்தால் மக்களின் மன பதற்றம் அதிகரிக்கும் மற்றும் அதன் பின்னர் அதன் விளைவுகளை கணிக்க முடியாது. கிறிஸ்தவர்களை பொறுத்தவரை இதுவரை கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்பவர்கள் 50 பேருக்கு மேல் அவசியமில்லை. மாஸ்க் அணிய வேண்டும், பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்கு முன்னும், பின்னும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும் மற்றும் சர்ச் உள்ளே சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் போன்ற உத்தரவுகளை அரசு பிறப்பிக்கலாம். விசுவாசிகள் மன அழுத்தத்திலிருந்து வெளியே வர மற்றும் மன மன பதற்றத்திலிருந்து வெளியே வர மற்றம் உள் அமைதியை கண்டுபிடிக்க கூட்டு பிரார்த்தனை அவசியம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.