லாக்டவுனால் பெட்ரோல், டீசல் விற்பனை சரிவு…. கடந்த 30 நாளில் மட்டும் ரூ.40 ஆயிரம் கோடி வரி வருவாயை இழந்து தவிக்கும் மத்திய அரசு…

 

லாக்டவுனால் பெட்ரோல், டீசல் விற்பனை சரிவு…. கடந்த 30 நாளில் மட்டும் ரூ.40 ஆயிரம் கோடி வரி வருவாயை இழந்து தவிக்கும் மத்திய அரசு…

லாக்டவுனால் கடந்த ஏப்ரலில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்கள் தேவை 80 சதவீதம் குறைந்ததால், பெட்ரோலிய பொருட்கள் வாயிலான ரூ.40 ஆயிரம் கோடி வரி வருவாயை மத்திய அரசு இழந்து இருக்கும் என பொருளாதார நிபுணர் கணித்துள்ளார்.

தொற்று நோயான கொரோனா வைரஸை தடுக்க மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை கடந்த மார்ச் 25ம் தேதி முதல் இம்மாதம் 3ம் தேதி வரை மொத்தம் 40 நாட்கள் நடைமுறைப்படுத்தியுள்ளது. பஸ், ரயில், விமான போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் பயன்பாட்டுக்காக மட்டும் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மாதத்தில் எரிபொருள் தேவை குறைந்ததால் மத்திய அரசுக்கு எரிபொருள் வாயிலான வரி வருவாய் கணிசமான அளவு குறைந்திருக்கும்.

பணம்

கேர் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் கூறியதாவது: மத்திய அரசு 130 கோடி மக்கள் மீது லாக்டவுன் விதிப்பு, போக்குவரத்து மற்றும் பல வர்த்தகங்கள் மூடல் காரணமாக கடந்த ஏப்ரலில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் பயன்பாடு குறைந்திருக்கும். இதனால் மத்திய அரசுக்கு பெட்ரோலிய துறை வாயிலான வரி வருவாய் அரசுக்கு குறையும். அதேசமயம் கச்சா எண்ணெய் விலையும் வீழ்ச்சி கண்டுள்ளது. 

பெட்ரோல் பங்கு

இதனால் எரிபொருட்கள் மற்றும் உள்நாட்டு எண்ணெய் வயல்களில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் வாயிலான வரி வருவாயும் குறையும் என்பதால் மத்திய அரசுக்கு கூடுதல் வருவாய் இழப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மதன் சப்னாவிஸ் மதிப்பீட்டின்படி, லாக்டவுனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் (பெட்ரோல்,டீசல்) பயன்பாடு குறைந்தபட்சம் 80 சதவீதம் குறைந்து இருக்கும். இதனால் மத்திய அரசுக்கு சுமார் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கும்.