லாக்டவுனால் ஒரே ஒரு சிட்டியில் மட்டும் 1,600 திருமணங்கள் ஒத்திவைப்பு…

 

லாக்டவுனால் ஒரே ஒரு சிட்டியில் மட்டும் 1,600 திருமணங்கள் ஒத்திவைப்பு…

லாக்டவுனால் உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் மட்டும் 1,600க்கும் மேற்பட்ட திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த 25ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை லாக்டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளது. மக்கள் வீட்டை வெளியே வர வேண்டாம் என்றும், தவிர்க்க முடியாத மற்றும் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியே வரும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. லாக்டவுனால் நாட்டின் பல பகுதிகளில் திருமணங்கள் எளிமையாக அரங்கேறி வருகின்றன. அதேசமயம் பல ஆயிரம் கணக்கான திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

லாக்டவுன்

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் மட்டும் லாக்டவுனால் 1,600க்கும் மேற்பட்ட திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் சில திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திருமண விழா தேவைகள் பூர்த்தி செய்யும் பல நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிச்சயமற்ற தன்மைக்கு முடிவில்லாமல் இருப்பதால் அந்நிறுவனங்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளன.

திருமணம்

லக்னோவில் லாக்டவுனால் ஒத்திவைக்கப்பட்ட திருமணங்களில் ஒன்று ஹேமந்த் பதாக்கின் திருமணமும் ஒன்று.  தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் 28 வயதான ஹேமந்த் பதாக் இது குறித்து அவர் கூறுகையில், ஏப்ரல் 25ம் தேதியன்று திருமணம் நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு கல்யாண பத்திரிகை கொடுத்து விட்டோம். திருமண சடங்கை பெரிய அளவில் கொண்டாட திட்டமிட்டு இருந்தோம். இருப்பினும் லாக்டவுனால் தனது திருமணத்தை ஒத்திவைத்துள்ளோம். கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் யுத்தத்தில் நாம் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் மற்றும் ஆதரவு அளிக்க வேண்டும். என்னை பொறுத்தவரை கூட்டம் இல்லாமல் எனக்கு திருமணம் சாத்தியமற்றது. இப்போது நாம் வீட்டுக்குள் இருக்க வேண்டும், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். அதனால் எனது திருமணத்தை இந்த ஆண்டு இறுதிக்கு ஒத்திவைத்துள்ளேன் என தெரிவித்தார்.