‘லஷ்மி’ குறும்பட நடிகை திருமணம்: வைரல் புகைப்படம்!

 

‘லஷ்மி’ குறும்பட நடிகை திருமணம்: வைரல் புகைப்படம்!

‘லஷ்மி’ குறும்படம் பலரது கவனத்தை ஈர்த்ததோடு  பல சர்ச்சைகளைச் சந்தித்தது. இதை தொடர்ந்து குறும்படங்கள், விளம்பரப்படங்களில்  பிஸியாக  நடித்து வருகிறார் லஷ்மி பிரியா.

 ‘லக்ஷ்மி’ குறும்பட நடிகை  லக்ஷ்மி பிரியா எழுத்தாளர் ஒருவரை கரம் பிடித்துள்ளார். 

மாயா, ரிச்சி உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தவர்  நடிகை லஷ்மி பிரியா.  இவர் நடித்த ‘லஷ்மி’ குறும்படம் பலரது கவனத்தை ஈர்த்ததோடு  பல சர்ச்சைகளைச் சந்தித்தது. இதை தொடர்ந்து குறும்படங்கள், விளம்பரப்படங்களில்  பிஸியாக  நடித்து வருகிறார் லஷ்மி பிரியா.

lakshmi

இந்நிலையில் லக்ஷ்மி பிரியா எழுத்தாளரும் தியேட்டர் நடிகருமான வெங்கட்ராகவன் ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். பெங்களூரில்  நடந்த இந்த திருமண விழாவில் திரைக்கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

 

lakshmi

முன்னதாக நடிகை லஷ்மி பிரியா ‘சிகை’ படத்தின் இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கும் ‘பாக்ஸி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.