லவ் பண்ணுங்க… லைஃப் நல்லா இருக்கும்! – பிக்பாஸ் லோஸ்லியா அட்வைஸ்

 

லவ் பண்ணுங்க… லைஃப் நல்லா இருக்கும்! – பிக்பாஸ் லோஸ்லியா அட்வைஸ்

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் லோஸ்லியா பேசுகையில், “அழகு ராணி விருது எனக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி. அழகு என்பது நம்முடைய குணம்தான் என்று நினைக்கிறேன். என்னை எனக்கே முன்பு பிடிக்காது. நான் என்னையே எப்போது காதலிக்கத் தொடங்கினேனோ, அப்போது இருந்துதான் வெற்றி வர ஆரம்பித்தது.

உங்களையே நீங்கள் காதலியுங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள் என்று பிக்பாஸ் பிரபலம் லோஸ்லியா கூறியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் லாஸ்லியா… அவர் நல்லவரா, கெட்டவரா என்று தெரியாத அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருந்தன. எத்தனையோ எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் லாஸ்லியாவுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. 

losliya-mariyanesan-02

இந்தநிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் லோஸ்லியா பேசுகையில், “அழகு ராணி விருது எனக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி. அழகு என்பது நம்முடைய குணம்தான் என்று நினைக்கிறேன். என்னை எனக்கே முன்பு பிடிக்காது. நான் என்னையே எப்போது காதலிக்கத் தொடங்கினேனோ, அப்போது இருந்துதான் வெற்றி வர ஆரம்பித்தது. நீங்களும் உங்களையே லவ் செய்ய ஆரம்பியுங்கள்… மற்றவர்களையும் லவ் பண்ணுங்க” என்றார்.
இந்த விருது வழங்கும் விழாவில் புடவையில் வந்திருந்த லோஸ்லியாவின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.