“லவ்வர்ஸ பிடிச்சு கல்யாணம் பண்ணிவைப்போம்…” இந்து மக்கள் கட்சிக்கு போலீசார் எச்சரிக்கை!

 

“லவ்வர்ஸ பிடிச்சு கல்யாணம் பண்ணிவைப்போம்…” இந்து மக்கள் கட்சிக்கு போலீசார் எச்சரிக்கை!

ஆண்டுதோறும் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் புத்தாண்டு கொண்டாட்டத்தைப் போல் இளைஞர் பட்டாளம் காதலர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள்.

இன்று உலக காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால்  காதலர்கள் ரோஜாக்கள், பரிசுப்பொருட்கள், வாழ்த்து அட்டைகள் என பல பரிசு பொருட்களை வாங்கி தங்கள் காதலர்களுக்குக் கொடுத்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். 

கி.பி. 3-ம் நூற்றாண்டில் ரோமப் பேரரசன் இரண்டாம் கிளாடியஸ் காலத்து வரலாறு தான் பிரதானம். திருமணத்துக்குத் தடைவிதித்து பேரரசன் பிறப்பித்த ஆணையை மீறி காதலர்களை இணைத்து வைத்ததற்காகப் பாதிரியார் வாலண்டைனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. மேற்குலக நாடுகளில் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்ட பிப்ரவரி 14- காதலர் தினம் என்பது இந்தியாவின் தாராளமயப் பொருளாதாரக் கதவுகள் திறக்கப்பட்ட காலத்தில் குடியேறிவிட்டது. ஆண்டுதோறும் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் புத்தாண்டு கொண்டாட்டத்தைப் போல் இளைஞர் பட்டாளம் காதலர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள்.

 

இந்நிலையில்  கடற்கரை மற்றும் பூங்காக்களில் காதல் ஜோடிகள் அத்துமீறினால் அவர்களை  பிடித்து திருமணம் செய்து வைப்போம் என இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ttn

இருப்பினும் காதலர்கள் பொதுஇடங்கள் அத்துமீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள காவல்துறை, காதலர்களுக்குப் பிரச்சனை ஏற்படுத்தும் வகையில், கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்க முயன்றால்  அவர்கள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இதனால் பொதுஇடங்களான கடற்கரைகள், பூங்காக்கள் ஆகியவற்றில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.