லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளையன் முருகனுக்கு உதவிய போலீஸார்… அதிர வைக்கும் பின்னணி..!

 

லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளையன் முருகனுக்கு உதவிய போலீஸார்… அதிர வைக்கும் பின்னணி..!

நீதிமன்றத்தில் சரணடையும் முன்பே முருகனை கைது செய்ய தீவிரமாக இருந்தனர். ஆனால், பெங்களூருவிலுள்ள சில போலீஸார் முருகனுக்கு உதவியால் அது கைநழுவிவிட்டது.

லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளையில் மூளையாக செயல்பட்ட முருகன் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், சல்லடை போட்டு தேடினர். ஆனால், பெங்களூரு போலீஸில் சிலருடன் முருகனுக்கு இருந்த நெருக்கத்தால், தமிழக போலீசாருக்கு அவர்கள் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

Lalitha

இந்த நிலையில் முருகனின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் காவல் துறையின் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டனர். அனைவருக்கும் நெருக்கடியும் அதிகரித்தது. இதனால், சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு முருகன் வந்திருக்கிறான்.

இதுதொடர்பாக முருகன், தனது நெருங்கிய வழக்கறிஞர்களுடன் தீவிரமாக ஆலோசனையின் ஈடுபட்டிருக்கிறான். அப்போது, ‘சிஆர்பிசி -44 சட்டப் பிரிவின்படி குற்றவாளியோ அல்லது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களோ இந்தியாவில் எந்த நீதிமன்றத்திலும் சரணடையலாம். அதனால், நீங்க தமிழ்நாட்டுக்கு செல்லாமல் இங்கேயே சரணடைந்துவிடுங்கள்” முருகனுக்கு வழக்கறிஞர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

lalitha

இந்த ஆலோசனையின் பேரில் பெங்களூரு எம்.ஜி சாலையிலுள்ள மேயோ ஹால் நீதிமன்றத்தின் முருகன் நேற்று சரணடைந்தான். இதனையடுத்து முருகனை, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தற்போது, முருகன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

நீதிமன்றத்தில் சரணடைந்த அடுத்த 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வழக்கு இருக்கும் சரகத்திலுள்ள நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவரை ஆஜர்ப்படுத்த வேண்டும். அதனடிப்படையில், விரைவில் முருகன் திருச்சி கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முருகனிடம் காவல் துறையினர் நடத்தும் விசாரணையில் இன்னும் பல தகவல்கள் வெளிவரலாம் என்றும் கூறுகிறார்கள் காவல் துறையினர்.

Robbery

வழக்கமாக ஒரு குற்றவாளியை நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்னதாக கைது செய்யவே காவல் துறையினர் முயற்சிசெய்வர். நீதிமன்றத்தில் சரணடையும் முன்னர் விசாரணை நடத்தும்போது முழு உண்மையும் வெளிக்கொண்டு வர முடியும். நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டால், அதன்பிறகு நீதிமன்றம் இடும் நிபந்தனைகளுக்கு ஏற்பவே விசாரணை நடத்த வேண்டியிருக்கும். அதனால், தங்கள் பாணியில் ‘உரிய’ விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர முடியாது என போலீசார் கருதுகின்றனர். அதனால்தான் நீதிமன்றத்தில் சரணடையும் முன்பே முருகனை கைது செய்ய தீவிரமாக இருந்தனர். ஆனால், பெங்களூருவிலுள்ள சில போலீஸார் முருகனுக்கு உதவியால் அது கைநழுவிவிட்டது.