லலிதா ஜூவல்லரி முருகன் கொள்ளையடித்த பணத்தை லஞ்சமாக வாங்கிய 2 போலீசாருக்கு சம்மன்!

லலிதா ஜூவல்லரி முருகன் கொள்ளையடித்த பணத்தை லஞ்சமாக வாங்கிய 2 போலீசாருக்கு சம்மன்!

திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த பணத்தில் சென்னை அண்ணாநகர் போலீசாருக்கு பங்கு கொடுத்தேன் என்று லலிதா ஜூவல்லரியில் திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரபல கொள்ளையன் முருகன் கூறியிருந்த நிலையில், இரண்டு போலீசாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் சிக்கியவர் முருகன். இவரிடம் நடத்திய விசாரணையில் சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்தது இவர்தான் என்பது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட 470 சவரன் நகை மற்றும் 19 லட்சம் பணத்தில் சென்னை அண்ணாநகர் போலீசார் இருவருக்கு லஞ்சம் கொடுத்ததாக முருகன் வாக்குமூலம் அளித்திருந்தான்.

lalitha-jewellery-robbery-01

போலீசாரே கொள்ளையனிடம் லஞ்சம் வாங்கிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் சென்னை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக அப்போது பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி, காவலர் ஜோசப் ஆகியோர் வருகிற ஜனவரி 3ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்ற சமயபுரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதுவே மற்ற துறையைச் சார்ந்தவர்களாக, பொது மக்களாக இருந்தால் சம்மன் அனுப்பியிருப்பார்களா என்றும் பொது மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.