லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு..!

 

லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு..!

சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும், முருகன் பெங்களூரு நீதி மன்றத்திலும் தானாகச் சென்று சரணடைந்தனர். 

திருச்சி லலிதா ஜூவல்லரியில் சில நாட்களுக்கு முன்னர், சுவரில் துளையிட்டு 13 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்தனர். 7 தனிப்படை அமைத்து, கொள்ளையர்களை வலைவீசித் தேடி வந்த காவல்துறையினர் கொள்ளையர்களில் ஒருவரான மணிகண்டனை கைது செய்தனர். அதன் பின், இந்த கொள்ளைக்கு மாஸ்டர் பிளான் போட்ட முருகனின் தங்கை கனகவள்ளியை போலீசார் கைது செய்தனர். அதன் பின், சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும், முருகன் பெங்களூரு நீதி மன்றத்திலும் தானாகச் சென்று சரணடைந்தனர். 

Murugan

அதனையடுத்து, பெங்களூர் போலீசார் முருகனிடம் விசாரணை மேற்கொண்ட போது முருகன் நகையை ஒளித்து வைத்த இடங்களைக் கூறியுள்ளார். அதனால், நகையை மீட்பதற்காக பெங்களூரு போலீசார் முருகனை திருச்சிக்கு அழைத்து வந்து அவர் சொன்ன பகுதிகளில் தோண்டி 11 கிலோ நகையை மீட்டுள்ளனர். 

Jewels

பெங்களூரு போலீசார் நகையை மீது சென்றதாக பெரம்பலூர் காவல்துறைக்கு எழுந்த தகவலின் அடிப்படையில், பெங்களூரு போலீசாரை வழி மறித்து 11 கிலோ தங்கத்தை பெரம்பலூர் காவல்துறையினர் மீட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்த போது, அது லலிதா   ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகை எனத் தெரியவந்துள்ளது.