லலிதா ஜுவல்லரியில் கொள்ளை: குற்றவாளி முருகனுடன் சிவகார்த்திகேயன் பட நாயகிக்கு தொடர்பா?!

 

லலிதா ஜுவல்லரியில் கொள்ளை:  குற்றவாளி முருகனுடன்  சிவகார்த்திகேயன் பட நாயகிக்கு தொடர்பா?!

முருகன் கொள்ளையடித்த பணம் மற்றும் நகையை வைத்துக்கொண்டு சினிமா தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்

லலிதா ஜுவல்லரியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முருகன் அந்த நகைகளை பிரபல நடிகையிடம் கொடுத்ததாகத்  தகவல் வெளியாகியுள்ளது. 

லலிதா ஜுவல்லரியில் 28 கிலோ தங்க நகைகள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி முருகன் என்பவர் சமீபத்தில் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே மணிகண்டன், கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் மீது ஏற்கனவே பல வழக்குகள்  தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பதியப்பட்டுள்ளது. கூட்டாக சேர்ந்துசெய்து வந்த இந்த கொள்ளையில்  தனக்கு வந்த பங்கை  சினிமா துறையில் பயன்படுத்தி வந்துள்ளதாகவும், அதிலும் சில நடிகைகளுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பதும்  தெரியவந்துள்ளது.

lalitha

இதுகுறித்து போலீசார் முருகனிடம் நடத்திய விசாரணையில்,  முருகன் கொள்ளையடித்த பணம் மற்றும் நகையை வைத்துக்கொண்டு சினிமா தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். அதன்படி நடிகை ஒருவரை அணுகி மான்ஸா என்ற பெயரில் மற்றும் ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார் முருகன். அதற்காக நடிகைக்கு 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டது. அத்துடன் முன்பணமாக 6 லட்சம் ரூபாயை அந்த நடிகை பெற்றுள்ளார். ஆனால்  பேசியபடி 50 லட்ச ரூபாயை தர முடியாததால் அந்த நடிகை முருகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கும் தற்போதுவரை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

laliha

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த முன்னணி நடிகை ஒருவரை வைத்து பணம் தயாரிக்க அவரை தொடர்புகொண்ட முருகன் அவரிடம் தன்னை நகைக்கடை அதிபர் என்று அறிமுகமாகியுள்ளார். மேலும் லலிதா ஜுவல்லரியில்  கொள்ளையடித்த பாதி நகைகளை அந்த நடிகையிடம் கொடுத்து புதிய படத்தில் கமிட் செய்ததாகவும் கூறப்படுகிறது.  நகை கடை அதிபர் என்று கூறியதால் அந்த நடிகைக்கும் அவர் மீது சந்தேகம் ஏதும் வரவில்லையாம். இதனால் விரைவில் சம்மந்தப்பட்ட நடிகையும் விசாரணை வளையத்துக்குள் சிக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.