லலிதாவின் ஒரு கிலோ நகைகளை போலீசே அபேஸ் செய்தது ! நீதிமன்றத்தில் கத்தி பேசிய கொள்ளையன் !

லலிதாவின் ஒரு கிலோ நகைகளை போலீசே அபேஸ் செய்தது ! நீதிமன்றத்தில் கத்தி பேசிய கொள்ளையன் !

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடை கொள்ளை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளில் ஒரு கிலோ நகைகளை போலீசாரே ஆட்டய போட்டுவிட்டதாக பரபரப்பாக தெரிவித்தார் சுரேஷ்.
தமிழகத்தில் பல்வேறு கிளைகளுடன் செயல்படும் லலிதா ஜுவல்லரியின் திருச்சி கிளையில் கடந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் முருகன், சுரேஷ் என்பவர்கள் உள்பட பலரை கைது செய்து நகைகளையும் பறிமுதல் செய்துள்ளது போலீஸ்.

lailitha

இந்நிலையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த சுரேஷ் என்பவர், மீண்டும் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்தனர்.
நீதிமன்றத்திற்குள் நுழையும் முன் வளாகத்தில் இருந்த செய்தியாளர்களை பார்த்து சுரேஷ் கத்திப் பேசினார். அதாவது, “திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை நானும் முருகன், மணிகண்டன், கணேசன் ஆகியோரும் பிரித்துக்கொண்டோம். என்னுடைய பங்கான 5.7 கிலோ தங்கத்தை கொண்டு செல்லும்போது போலீசாரிடம் மாட்டிக்கொண்டேன். அப்போது அவர்கள் என்னிடம் இருந்து எல்லா நகைகளையும் பறிமுதல் செய்துவிட்டனர். ஆனால் தன்னிடம் இருந்து 4.7 கிலோ தங்கத்தை மட்டுமே பறிமுதல் செய்ததாக கணக்கு காட்டியுள்ளனர். மீதி 1 ஒரு கிலோ தங்கத்தை போலீசாரே எடுத்துக்கொண்டனர். தாங்கள் ஈடுபடாத கொள்ளை வழக்கிலும் தொடர்புபடுத்தி போலீசார் அச்சுறுத்துகின்றனர்” என கூறினார்.

suresh

இதையடுத்து அவரை கட்டாயமாக போலீசார் நீதிமன்றத்திற்குள் அழைத்து சென்றனர். அவரை 16-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  இதற்கிடையே 2017-ஆம் ஆண்டு திருச்சி கே.கே.நகரில் வீடு ஒன்றில் நடந்த கொள்ளை வழக்கில் சுரேஷை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.