லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லேவின் சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டு நெகிழ்ந்த அமிதாப் பச்சன்

 

லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லேவின் சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டு நெகிழ்ந்த அமிதாப் பச்சன்

பாலிவுட்டின் பிக் பி அமிதாப் பச்சன் தனது 77 வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக செய்லபட்டு வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்திற்கு 44 மில்லியன் பாலோவர்களை பெற்ற முதல் இந்திய நடிகரும் இவர்தான்.இன்று அவர் டீவீட் ஒன்றை வெளியிட்டார் .

பாலிவுட்டின் பிக் பி அமிதாப் பச்சன் தனது 77 வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக செய்லபட்டு வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்திற்கு 44 மில்லியன் பாலோவர்களை பெற்ற முதல் இந்திய நடிகரும் இவர்தான்.இன்று அவர் டீவீட் ஒன்றை வெளியிட்டார் . அதில் இரு சிறுமிகளின் புகைப்படம் கருப்பு வெள்ளையில் இருந்தது. அது யார் என்று பார்த்தால் பாலிவுட்டின் புகழ்பெற்ற பாடகிகளான லதா மங்கேஷ்கரும், ஆஷா போஸ்லேவும் தான். அந்த புகைப்படத்தில் இரு சகோதரிகளும் ஃபிராக் மற்றும் பாவாடை உடையில் போஸ் கொடுத்தவாறு உள்ளனர்.

latha-mangeskar

 

இன்று முன்னதாக வெளியிட்ட லதா மங்கேஷ்கரின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, பிக் பி பாடகி சகோதரிகள் குழந்தைகளாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அதில் “இது லதா ஜி மற்றும் ஆஷா ஜி ஆகியோரின் குழந்தை பருவ புகைப்படம். லதா ஜி இன்று தனது ட்வீட்டில்  தனது குருக்களை எவ்வாறு நினைவு கூர்ந்தார் என்பதைப் படித்தேன், திடீரென்று அவர்களுடைய இந்த புகைப்படத்தைக் கண்டேன். டெலிபதி!” என்று பதிவிட்டிருந்தார்.