லண்டன் சிறையில் நிரவ் மோடிக்கு லேப்டாப் ?!

லண்டன் சிறையில் நிரவ் மோடிக்கு லேப்டாப் ?!

இந்தியாவின் வைர வியாபாரி நிரவ் மோடி தற்சமயம் லண்டனில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவருக்கு எதிராக இந்தியா 5000க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட ஆதாரங்களைக் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.இது தொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் வழக்கறிஞர் ஜெசிகா ஜோன்ஸ்,  சிறை நிர்வாகம் நிரவ் மோடிக்கு லேப் – டாப் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 

nirav modi

இது தொடர்பாக நிரவ் மோடியின் வழக்கறிஞர் ஜெசிகா ஜோன்ஸ் கூறுகையில், நிரவ் மோடிக்கு எதிராக இந்தியா 5000 க்கும் அதிகமான பக்க ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அவை அனைத்தையும் எனது கட்சிகாரரிடம் காண்பிக்க சிறைக்குள் எடுத்துச் செல்வது சிரமம்.  ஜூலை 29 ம் தேதி நிரவ் மோடியை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாக, அவருக்கு எதிரான ஆதாரங்கள் தொடர்பாக அவர் பதிலளிக்க தயாராக வேண்டும். இதனால் சிறை நிர்வாகம் அவருக்கு லேப்டாப் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

nirav modi

நிரவ் மோடியின் இந்த கோரிக்கைக்கு லண்டனில் உள்ள சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இருந்தும், நாங்கள் இன்டர்நெட் இணைப்புடன் கேட்கவில்லை என்றும், நிரவ் மோடி தனக்கு எதிரான ஆதாரங்களை பார்க்கவே லேப்டாப் கேட்கிறோம். ஒரு பெட்டி நிறைய இருக்கும் ஆதாரங்களை ஒரே நாளில் அவரிடம் காண்பிப்பது முடியாத காரியம். அதனாலேயே லேப்டாப் கேட்கிறோம் என தொடர்ந்து வாக்குவாதம் செய்துள்ளார்.