லண்டன் அமைச்சரவை: இன்போசிஸ் நிறுவனர் மருமகன் உள்பட 3 இந்திய வம்சாவளியினருக்கு அமைச்சர் பதவி!

 

லண்டன் அமைச்சரவை: இன்போசிஸ் நிறுவனர் மருமகன் உள்பட  3 இந்திய வம்சாவளியினருக்கு அமைச்சர் பதவி!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் மூன்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் மூன்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். 

இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன்  நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து  பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி எலிசபெத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். போரிஸ்  ஜான்சன் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி பட்டேல், ரிஷி சுனாக் மற்றும் அலோக் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

preeti

இதில் பிரீத்தி பட்டேலுக்கு  உள்துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பிரீத்தி பட்டேல் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட சுஷில், அஞ்சனா பட்டேல் தம்பதியருக்கு லண்டனில் 1972-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி பிறந்தார். இவர் சர்வதேச வளர்ச்சித்துறையாகப் பதவி வகித்து அரசியல் காரணங்களுக்காக 2017-ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார். இந்தியர்கள் பங்குபெறும் விழாக்களில் தவறாமல் கலந்துகொள்ளும் பிரீத்தி படேல் மோடியின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. 

alok

அடுத்ததாக அலோக் சர்மா, சர்வதேச வளர்ச்சித்துறை அமைச்சராக  நியமிக்கப்பட்டுள்ளார். அலோக் சர்மா  வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். ஆக்ராவில் பிறந்த இவர் ஐந்து  வயதாக இருக்கும் போது  குடும்பத்துடன் லண்டனில் குடிபெயர்ந்தார். 

london

இதையடுத்து போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் ரிஷி சுனாக்குக்கு, கருவூலத்துறை அமைச்சர்  பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் பிறந்த ரிஷி சுனாக், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின்  மகள் அக்‌ஷதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் . இவர் முன்னதாக ராஜாங்க மந்திரி பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.