லண்டனுக்கு எஸ்கேப்பா?…….யெஸ் பேங்க் நிறுவனர் ரானா கபூரின் மகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்……

 

லண்டனுக்கு எஸ்கேப்பா?…….யெஸ் பேங்க் நிறுவனர் ரானா கபூரின் மகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்……

லண்டன் செல்ல மும்பை விமான நிலையத்துக்கு வந்த யெஸ் பேங்க் இணை நிறுவனர் ரானா கபூரின் மகள் ரோஷிணி கபூரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாக விளங்கிய யெஸ் பேங்கின் இணை நிறுவனர் ரானா கபூர். கடந்த சில மாதங்களாக யெஸ் பேங்க் பெரிய நிதிநெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று யெஸ் வங்கியின் மோசமான நிதி நிலைமையை காரணம் காட்டி அந்த வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது.  மேலும் அந்த வங்கியின் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

யெஸ் பேங்க்

இதனை தொடர்ந்து சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக யெஸ் பேங்க் நிறுவனர் ரானா கபூரிடம் அமலாக்கத்துறை சுமார் 36 மணி நேரம் விசாரணை நடத்தியது. அதன்பிறகு சட்டவிரோ பணபரிமாற்றம் குற்றச்சாட்டின்கீழ் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. பின் நேற்று அவர் நேற்று சிறப்பு நீதிமன்றமத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிறப்பு நீதிமன்றம் ரானா கபூரை மார்ச் 11ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்திருக்க அனுமதி அளித்தது.

ரானா கபூர்

இதற்கிடையே ரானா கபூரின் 3 மகள்கள் மற்றும் மருமகன் ஆதித்யா உள்பட அவரது ஒட்டு மொத்த குடும்பத்தினருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ரானா கபூரின் மகள்களில் ஒருவரான ரோஷிணி கபூர் லண்டன் செல்வதற்காக நேற்று மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். ஆனால் லுக்அவுட் நோட்டீஸ் காரணமாக அவரை லண்டன் செல்ல விடாமல் விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அமலாக்கத்துறை விசாரணை வளையத்துக்குள் இருக்கும் நிலையில், அவர் லண்டன் செல்ல முயற்சி செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.